Sunday, November 15, 2009

மாயாவதி - புயலின் வாழ்க்கை

மாயாவதி - புயலின் வாழ்க்கை

 மாயாவதி = 100 ஜெயலலிதாவுக்கு சமம் என்று என்னிடம் பலர் கூறினார்கள். அது நிஜம் தான், ஆனாலும் மாயாவதி என்பவர் தலித்+பெண் என்ற இரண்டு பெரிய தடைகளை உடைத்து வந்தவர் என்பது இந்த புத்தகத்தை புரட்டிய பின்பு தான் தெரிந்துகொள்ள முடிந்தது.
பலரும் நினப்பது போல மாயாவதி கிராமத்தில் பிறந்தவர் இல்லை., இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் பிறந்து வளர்ந்தவர். 1956-ம் வருடம் ஜனவரி 15-ம் தேதி இரண்டாவது பெண் குழந்தையாக பிறந்த, இவரின் அப்பா சாதாரண எழுத்தர். இருந்தும் மாயாவதி அம்மாவின் அரவணைப்பால் பி.ஏ., பி.எட்., வரை பயின்றார், பின்னாலில் சட்டம்(பி.எல்) கூட படித்துள்ளார். சிறுவயது முதலே மாயாவதிக்கு அப்பாவின் மீது பற்று இல்லை என்கிறார் நூலாசிரியர் சி.என்.எஸ்.
இளங்கன்று பயம் அறியாது!
மாயாவதி, “சிறு வயது முதலே தன்னை ஒரு தாழ்ந்த சாதியாக நம்பத்தயாராக இல்லாதவர்”. காந்தியின் மீது அளவற்ற வெறுப்பும், அம்பேத்கர் மீது பாசமும் உடையவராக காணப்பட்டார். ஒருமுறை பள்ளி மேடையில் பேசும்போது, “நாங்கள் கடவுளின் குழந்தைகள் (ஹரிஜன்) என்றால், காந்தி என்ன சாத்தானின் குழந்தையா? என்று தன் ஆதங்கத்தை ஆழமாக பதிவு செய்தார். இந்த அடாபுடா பேச்சு தான் அவரை கன்ஷிராமிடம் கொண்டு சேர்த்தது.
ஹரிஜன் – மாயவதியின் கருத்து
ஹரிஜன் என்பது தங்களை பெருமைப்படுத்தவில்லை.! 
தங்களுக்கு எதிரான கொடுமைகளை, அநீதியை மறைக்க பார்க்கிறது..! என்ற பெரும்பாலான தலித் மக்களின் கருத்தை பதிவு செய்கிறார் சி.என்.எஸ்.  
இதைப்பற்றி மாயாவதி கூறுகையில்.. 
நான் ஹரிஜன் இல்லை. அந்த வார்த்தையை பயன்படுத்தி யார் என்னை அழைத்தாலும், அதை அவமானமாக கருதுகிறேன். நான் ஒரு தலித் என்பதையே பெருமையாக நினைக்கிறேன்
 பகுஜன் சமாஜ் கட்சி
மாயாவதி கன்ஷிராமை பார்த்த அந்த முதல் சந்திப்பிலேயே, இனிமேல் அவர் தான் தனது குருநாதர்”, என்று முடிவு செய்துவிட்டார். கன்ஷிராம்-மாயாவதிக்கு இடையே உள்ள தொடர்பு பற்றி இந்த நூலில் உள்ளவை சில: 
மான்யவர் கன்ஷிராமை, நான் எனது அரசியல் குருவாகவும், தந்தைக்கு இணையான ஒருவராகவும் மட்டுமே கருதுகிறேன் என்று மாயாவதி குறிப்பிடுகிறார். 
அதனையும் மீறிய விசேஷ கவனம், உரிமை உணர்வு (Possessive) இருவருக்குமிடையே இருந்ததாக சி.என்.எஸ் குறிப்பிடுகிறார். 
முதலில் மாயாவதியின் டார்கெட் பாராளுமன்றம் தான்., ஆனால் அந்த வெற்றியை சுவைக்க அவர் 4 தேர்தல்கள் மட்டுமல்ல; மீராகுமார் (இன்றைய நாடளுமன்ற அவைத்தலைவர்), ராம்விலாஸ் பஸ்வான் (முன்னாள் மத்தியஅமைச்சர்) போன்றோரையும் எதிர்த்து போராட வேண்டியதாயிற்று.
முதல்வர் மாயாவதி:
1992-ம் ஆண்டு ராமஜென்ம பூமி பிரச்னைக்கு பிறகு ஏற்ப்பட்ட குழப்பநிலையின் காரணமாக, மாயாவதி-முலாயம் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. முலாயம் தான் முதல்வர்; ஆனால் சூப்பர் சி.எம் மாயாவதியே! இதனால் ஆட்சி விரைவிலேயே கவிழ்ந்தது. பாஜக-வுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தார்., மாயாவதி. முதல் முறையாக இந்தியாவின் தலித் முதல்வரான பெருமையை பெற்றார்.
அன்றைய பிரதமர், நரசிம்மராவின் வாழ்த்து செய்தி..
சமூகத்தால் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒரு பெண், தன்னுடைய மாநிலத்தின் முதலமைச்சர் பொறுப்புக்கு உயர்ந்திருப்பது இந்திய மக்களாட்சியின் அதிசயம்.
கூட்டணி:
அதன் பிறகு மாயாவதி அமைத்தக் கொண்ட அனைத்துக் கூட்டணிகளாலும், அவர் அடைந்த நன்மையே அதிகம். முலாயம் சிங், பாஜக, காங்கிரஸ் என்று இப்படி மாற்றி, மாற்றி கூட்டணி அமைப்பதால் மக்கள் என்ன நினைப்பார்கள்? என்றெல்லாம் நினைக்க மாட்டார். வீட்டில் உட்கார்ந்திடுப்பதை விட கொஞ்ச நாளாவது ஆட்சி செய்யலாம், என்பது மாயாவதியின் கருத்து. 
அதற்காக யாருடனும் கூட்டணி அமைக்க அவர் தயங்கியதே இல்லை. பிராமணர்கள், ரௌவுடிகள் என்று இந்த பட்டியல் நீண்டது. உ.பி அரசியலில் தலித் மக்கள் தவிர, வேறு யாருடனும் அவர் நிரந்தரமாக கூட்டணி அமைத்ததே இல்லை.
தலித் மகள் – பிம்பத்தில் விரிசல்
2002-க்கு பிறகு முலாயம் தான் லேசாக பற்றவைத்து போட்டார் வெடியை! இவ்வளவு பணம், நகை, சொத்து இதெல்லாம் மாயாவதிக்கு எப்படி வந்த்து? எங்கிருந்து வந்தது? போன்ற கேள்விகளால் ஊடகங்களும் துளைத்தெடுத்தன.
கடைசியில் அமலாக்க பிரிவின் விசாரனைக்கு பிறகு, மாயாவதிக்கு உ.பி., டெல்லியில் 72 வீடுகளும், ஏராளமான பணம், நகை; போன்றவற்றை அவர் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துளார்”, என்றது.
இதற்கெல்லாம் மாயாவதியின் பதில் எல்லாவற்றுக்கும் என்னிடம் கணக்கு இருக்கிறது!!? ஆனால் இன்று வரை அது வெளியிடப்படவில்லை.
மக்கள் என் பக்கம்
இத்தனை விசாரணைக்கு நடுவிலும் 2006 தேர்தலில் தனியாக நின்ற மாயாவதி 206 (மொத்தம் 422) இடங்களில் வெற்றி பெற்றார்.  
எங்களுக்கு, மாயாவதி மீது நம்பிக்கை இருக்கிறது என்று மக்கள் தீர்ப்பளித்தனர். இது 13 வருடங்களில் மிகப்பெரிய வெற்றி. யாரும் பெறாத தனிப்பெரும்பான்மை.!
மாயாவதி – அடுத்த பிரதமர்
2009 தேர்தலின் போதே சரியாக காய் நகர்த்தி இருந்தால் மாயாவதியின் கனவு, நினைவாயிருக்கும். கன்ஷிராம் உயிரோடு இருந்திருந்தால் அது நடந்திருக்கலாம். இவர் அதை தவறவிட்டார், என்பது அனைவரும் அறிந்ததே!
ஆனாலும் நூலாசிரியர் கூருவது போல 50-களின் முற்பகுதியில் இருக்கும் மாயாவதிக்கு வயது இருக்கிறது! 2014-ல் கூட சாதிக்கலாம். 2019-ல் கூட அந்த நிகழ்வு நடக்கலாம்.!!


இதல்லாம் நடக்க மாயாவதிக்கு தேவை! இந்தியாவில் எப்போது பேசப்படும் 3வது அணியை சரிசெய்வது! சிறந்த கூட்டணியை உருவாக்குவது!! எல்லாருடணும் சமரசமாக செல்வது (பிஜேபி, காங்கிரஸ்) தவிர.!! மிக முக்கியம் சிறந்த கனிவான தலைமை பண்பு... இதில் மக்கள் ஆதரவை நான் சொல்லவில்லை, ஏனென்றால் மக்கள் என்றுமே அவர் பக்கம் தான்.....
மாயாவதி – என்றுமே மக்களின் ராணி. இப்புத்தகம் அவரை பற்றிய ஒரு அரிய தொகுப்பு..
இந்த புத்தகத்தை வாங்க:

விலை: ரூ. 80
ISBN :  978-81-8493-185-3
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
ஆசிரியர் கருத்து: பெண். தவிரவும், ஒரு தலித். எனவே, அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தொடர்ச்சியான அடக்குமுறைகளை மாயாவதி சந்திக்க-வேண்டிவந்தது. அடிதடிகளும் ஆர்ப்பாட்டங்களும் அடாவடிகளும் நிறைந்த அரசியல் களத்தில் கால் பதிப்பதே சவாலான காரியம் என்னும் நிலையில், அசாத்தியத் துணிச்சலுடன் போராடிய மாயாவதி இன்று நாட்டின் மிகப் பெரும் மாநிலத்தின் முதல்வர்.

Friday, November 6, 2009

சச்சின் - நான் ரசித்த இரண்டு பதிவுகள்!

சச்சின் எனும் மாவீரன்!!


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவை டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டுமெனில் முதலில் அவர்கள் அவுட் ஆக்க நினைப்பது
லட்சுமணனை. இந்தியாவை ஒருநாள் போட்டிகளில் தோற்கடிக்க நினைத்தால் முதலில் எடுக்க விரும்பும் விக்கெட் சந்தேகமில்லாமல்
சச்சினைத்தான். இன்று நடந்த போட்டியையும் சேர்த்தால் இதுவரை ஒன்பது சதங்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமே சச்சின் அடித்திருக்கிறார்.

முதல் பேட் செய்த ஆஸி.வீரர்கள் 350 ரன்களை குவித்தபோது கடைசி பந்தில் அவுட்டானார் கேமரூன் ஒயிட். அந்த பந்து தஞ்சமடைந்தது சச்சினின் கைகளில். பிடித்தவுடன் கோபத்தில் பந்தை தரையில் அவர் எறிந்தபோதே அவரது ரசிகர்கள் உணர்ந்திருப்பார்கள் இன்றொரு ருத்ரதாண்டவம் இருக்கிறதென்று!! ஏனெனில் சச்சின் கோபப்படுவது மிக அபூர்வம்.

ஷார்ஜாவில் பதினோரு வருடங்களுக்கு(1998) முன்பு சச்சின் அடித்த அடியை எந்த ஒரு கிரிக்கெட் ரசிகனும் அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது.காரணம், அவர் அடித்த இரண்டு சதங்களால்தான் இந்தியாவுக்கு அந்த கோப்பை கிடைத்தது என்பதை காட்டிலும் அந்த இரு சதங்களை எப்படி அவர் அடித்தார் என்பதே ஆகும். காஸ்பரோவிச் என்னும் ஆஸி பவுலரை அவர் அடித்த அடியில் சில வருடம் அவரை ஆஸி அணியிலேயே காணமுடியவில்லை. எதிர்முனையிலிருந்து லட்சுமணன் இரண்டாவது ரன் எடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் ஒரு ரன்னோடு நின்றுவிட்டார். புயலனெ விளையாடிக்கொண்டிருந்த சச்சின் வேகமாக சென்று லட்சுமணனிடம் இப்படி சொன்னார் "ஓட முடியாவிட்டால் ஏன் கிரிக்கெட் விளையாட வந்தாய்?" காரணம் அது இறுதிபோட்டி.

பைனலில் ஆஸி இந்தியாவிடம் தோற்ற போது ஸ்டீவ் வாக் சொன்னார்...

"It was one of the greatest innings I have ever seen. There is no shame being beaten by such a great player, Sachin is perhaps only next to the Don."


தனது சட்டையை கழற்றி சச்சினிடம் ஆட்டோகிராப் வாங்கிய ஷேன் வார்ன் புலம்பி்யது இப்படி:

"I'll be going to bed having nightmares of Sachin just running down the wicket and belting me back over the head for six. He was unstoppable. I don't think anyone, apart from Don Bradman, is in the same class as Sachin Tendulkar. He is just an amazing player"

2004ல் சச்சின் சற்று சறுக்கியபோது
Times of India பத்திரிகை அவரது கார்டூனை முதல் பக்கத்தில் வெளியிட்டு "END-DULKAR?" என்று ஏளனம் செய்தது. அப்போதும் சச்சின் அமைதியாகவே இருந்தார். அதன்பிறகான ஒரு போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக அவர் அடித்த 140 ரன்கள் சச்சினுக்குள் இன்னும் கிரிக்கெட் மிச்சமிருக்கிறது என்பதை உணர்த்தி பத்திரிகைகளை வாயடைக்க செய்தது.

விழுகின்ற போதெல்லாம் விழுந்துவிட்டோம் என்று கலங்கி ஒதுங்கி விடும் கிரிக்கெட் உலகில் விழுவதே எழுவதற்காகத்தான் என்பதை சச்சின் நிரூபித்துக்கொண்டே இருப்பார்.

இந்த முறை ஆஸிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் சற்று தடுமாறிவுடன் வழக்கம்போல் பத்திரிகைகள் சச்சின் தேவையா என்று எழுத ஆரம்பித்தன. மூன்றாவது போட்டியில் எதிர்பாராத ரன் அவுட்(பவுலர் மறைத்துக்கொண்டதால்) என்றபோது அவர் அடித்த 32 ரன்கள் அடுத்த போட்டிக்கான விதையாகவே எல்லோர் மனதிலும் விழுந்தது. நான்காவது ஒருநாள் போட்டியில் 40 ரன்கள் எடுத்த நிலையில் "பக்னர்" ஞாபகத்தில் நின்ற நடுவரால் தவறுதலாக எல்.பி.டபிள்யூ கொடுக்கப்பட்டபோது சச்சினுக்காக பரிதாப பட மட்டுமே முடிந்தது.

ஆனால் இன்று?

19 பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள்,141 பந்தில் 175 ரன்கள்! ஆஸி அணி கடைசில் ஜெயித்தாலும் மனதளவில் வெற்றி இந்தியாவுக்குத்தான் என்பதில் சந்தேகமே இல்லை. எங்கள் தேசத்தின் இணையற்ற விளையாட்டு வீரனின் மிகச்சிறந்த ஆட்டத்தை ஆஸி ரசிகர்கள்கூட கொண்டாடி இருப்பார்கள்!
36 வயதில், சேசிங் செய்யும்போது 175 ரன்கள் என்பதெல்லாம் எல்லா விளையாட்டு வீரனாலும் நினைத்துக்கூட பார்க்க முடியாதது. Good க்கும் Greatக்குமான வித்தியாசத்தை இங்கே நாம் அறிந்துகொள்ளலாம்.

சென்னையில் 1999ல் பாக் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிகுந்த முதுகு வலியுடன் சச்சின் இந்தியாவை வெற்றியை நோக்கி இழுத்துச்சென்றார். எதிர்பாராதவிதமாக 15க்கும் குறைவான ரன்கள் தேவைபடும்போது சக்லைன் முஷ்டாக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு இந்திய கிரிக்கெட் அணி தங்களுக்கே உரித்தான "வாக் ஷோ" நடந்தேறியது. பின்னால் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வெற்றி பெற வேண்டிய இந்திய அணி தோல்வியை தழுவியது. ட்ரெஸ்ஸிங் ரூமில் இந்த தோல்வியை தாங்க முடியாத சச்சின் கதறி அழுததாக உடனிருந்தவர்கள் பின்னாட்களில் வருத்தத்தோடு சொன்னார்கள்.இன்றும் அது நடந்திருக்கலாம். ஒரு மகாவீரனின் கண்ணீர்துளிகள் அவனை அறியாமலேயே பல வித்துக்களை உருவாக்குகிறது.அவரது கண்ணீரின் வலிமை இனி வரும் இரு போட்டிகளில் இந்தியா வெற்றி பெறும் என்பதை வெகு நிச்சயமாக நமக்கு உணர்த்துகிறது.

சச்சினின் விளையாட்டை பார்த்தே கிரிக்கெட் மீது ஆர்வமாகி விளையாட வந்த கிரிக்கெட் வீரர்கள் பலர். சேவாக்,யுவராஜ்,தோனி போன்ற அதிரடி கிரிக்கெட் வீரர்களுக்கு சச்சின் தான் காட்பாதர்.

சச்சினின் விளையாட்டை பார்ப்பதற்காகவே கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தவர்கள் பலகோடி மக்கள். 90களில் சச்சின் அவுட் ஆகிவிட்டால் டிவியை அணைத்துவிட்டு மறுநாள் செய்திதாளில் இந்தியா தோற்றதை அறிந்துகொள்ளலாம்.

சச்சின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்போதெல்லாம் அவருக்கு அடுத்ததாக களமிறங்கவேண்டிய அசாரூதின் பெஞ்சில் அமர்ந்து உறங்கி கொண்டிருப்பார்.எப்படியும் சச்சின் உடனே அவுட் ஆகபோவதில்லை என்கிற அசைக்க முடியாத நம்பிக்கைதான் காரணம்.

1999ல் பாக்கிஸ்தானிடம் தோற்ற ரணத்தை அதற்கு பழிதீர்க்கும் விதமாக 2003 உலககோப்பையில் தீர்த்துக்கொண்டார் சச்சின். அவர் அடித்த அடியில் தன்னை இனி பந்துவீச அழைக்க வேண்டாம் என்று வாக்கார் யூனிஸிடம் கெஞ்சினார் சோயிப் அக்தர்!! எத்தனையோ சதங்களை சச்சின் விளாசி இருந்தாலும் அந்த போட்டியில் அடித்த 97 ரன்கள் One of the best innings for the Little Master!!

இன்றைய சச்சினின் ருத்ரதாண்டவத்தை ஆஸியின் புதிய வீரர்கள் இதற்கு முன் பாத்திருக்கவில்லை(பாண்டிங்கை தவிர) மயிரிழையில் ஜெயித்தபோதும் இனி வரும் போட்டிகளில் இந்த மாவீரனை எப்படி எதிர்கொள்வது என்பதே இப்போது அவர்களது கவலையாக இருக்கும்.

வெகு நாட்கள் கழித்து "பழைய" சச்சினை பார்த்த ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு மிஞ்சி இருக்கும் இருபோட்டிகளை இந்தியா வெல்ல சச்சின் காரணமாக இருக்கவேண்டும் என்பதுதான்.

சச்சினின் உடலில் காயம் இல்லாத இடமே இல்லை எனலாம். டென்னிஸ் எல்போ,முதுகுவலி இப்படி நிறைய. ஆனாலும் தொடர்ந்து சச்சின் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதற்கு ஒரே ஒரு காரணம் அது 2011 உலககோப்பையை இந்தியாவுக்கு பெற்றுத்தர வேண்டும் என்கிற வெறி.

2003 உலககோப்பையை வெல்ல இந்திய அணியினர் 100% போராடியபோதும் சச்சின் மட்டும் 200% போராடினார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு கறுப்பு தினத்தில் ஆஸியிடம் பைனலில் தோற்றபோது சச்சினை தொடரின் ஆட்டநாயகன் விருதை வாங்க அழைத்தார்கள். அப்போது மேடையேறிய சச்சினின் கவலைதோய்ந்த முகத்தை இன்றுவரை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த Agony மாறும் 2011ல்.

ஒரு மிகச்சிறந்த சச்சின் - வாசகத்தோடு இதை நிறைவுசெய்கிறேன்.


"Commit all your crimes when Sachin is batting. They will go unnoticed because even the Lord Is watching." 

நன்றி: நிலா ரசிகன் (http://www.nilaraseeganonline.com/2009/11/blog-post_06.html) 


சச்சினாலா தோற்றோம்?

6 November 2009 549 views 12 Comments
If you're new here, you may want to subscribe to my RSS feed. Thanks for visiting!

 இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு சவால் விட்டு நிர்ணயித்த இலக்கு 351.
 
50 ஓவர்களில் 351 ரன்கள் என்பது மிகவும் கடுமையான, ஒரு ஓவருக்கு சராசரியாக 7.50 ரன்கள் எடுத்தால் மட்டுமே அடையக்கூடிய இலக்கு. என்னதான் பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தாலும் தொடர்ந்து வேகமாக விளையாடினால் மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும்.

அதுவும் பீல்டிங்கில் கேட்ச் விடாகண்டர்களும், போலிங்கில் ரன் கொடாகண்டர்களும் நிரம்பிய ஆஸ்திரேலியா போன்ற எதிரியை சமாளித்து இத்தனை ரன்கள் எடுப்பது என்பது 50 ஓவர்களில் 450 ரன்கள் எடுப்பதற்கு சமம்.

சாதாரணமாக விளையாடுவதை விட இரண்டு மடங்கு சிறப்பாகவும், சாமர்த்தியமாகவும் விளையாட வேண்டியது அவசியம். நல்ல அஸ்திரங்கள் இல்லாமல் ஆஸ்திரேலியர்களை வெல்ல முடியாது.

நம்முடைய அஸ்திரங்கள் ஷேவாக், கம்பீர், யுவராஜ், தோனி, ரய்னா இவர்களுடன் ப்ரம்மாஸ்திரமாக சச்சின். ஷேவாக் வழக்கமான பாணியில் தீபாவளி 1000 வாலா போல விளையாடிவிட்டு போனாலும் பின்னே வந்த கம்பீர், யுவராஜ், தோனி ஆகிய அஸ்திரங்கள் இன்று 160 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே பொய்த்தன. 162க்கு நாலு மாட்டிக்கொண்டிருந்த இந்தியாவுக்கு இன்னும் வெற்றி பெறலாம் என்று நம்பிக்கை இருந்தது, காரணம் சச்சின் என்கிற ப்ரம்மாஸ்திரம் ஆஸ்திரேலியர்களை பந்தாடிக் கொண்டிருந்ததுதான்.

எல்லோரும் பெவிலியனுக்கு நடையை கட்டிய பின்னும் 7 அடித்தவுடன் 17 ஆயிரம் தொட்ட சச்சின் ரய்னாவை சரியான வழியில் நடத்தி புது நிறுவனம் கண்டு இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அருகே ஓட்டி வந்து விட்டார். ”சச்சின் அடிச்சா இந்தியா ஜெயிக்காது” என்று சச்சின் பழிப்போரில் முதல் வரிசையில் நிற்கும் நான் கூட ”சரிதான் இன்னிக்கு மனுஷன் நம்ப முகத்துல கரி பூசப்போறார்” என்று நினைத்துக் கொண்டு ஒரு மன்னிப்பு பதிவு போட வேண்டும் என்று மனதிற்க்குள் பதிவுக்கான வார்த்தைகளை தேட துவங்கிவிட்டேன். அப்படி இருந்தது சச்சினின் சூறாவளி ஆட்டம்.

ரய்னா வெளியேறவும் கொஞ்சம் பயம் கவ்வியது. இருப்பினும் ஜடேஜாவுக்கும் வழிகாட்டி சச்சின் நம்மை வெற்றி இலக்குக்கு 19 ரன்கள் மட்டுமே தேவை என்று கொண்டு வந்து விட்டார். அவ்வளவுதான் இன்னும் ஓரிரு ஓவரில் வெற்றி என்று நினைக்கும்போது சச்சின் மெக்கேயிடமிருந்து ஒரு பவுண்டரி சம்பாதிக்க நினைத்து தூக்கியதில் வாட்சன் கையில் பந்து விழுந்தது, நம் கண்ணில் மண் விழுந்தது.

ஜடேஜா மடத்தனமாக ஓடியும், அவருக்கு பின் வந்தவர்கள் பிட்சில் ஓடியோ ஓடாமலோ ஆடி அவுட்டாகி பெவிலியனை நோக்கி ஓடுவதிலேயே குறியாக இருக்க வெறும் மூன்று ரன்களில் இந்தியா தோற்றதில் ஆஸ்திரேலியா இந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மூன்றுக்கு இரண்டு என்று முன்னேறிவிட்டனர்.
சச்சின் அவுட்டான பின் நமக்கு தேவையாக இருந்தது பத்தொன்பதே ரன்கள். அதை மற்ற 4 பேரும் சேர்ந்து அடித்திருந்தால் சச்சினை பாராட்ட நாடே புறப்பட்டிருக்கும்.

அது நடக்காததால் நான் உள்பட அத்தனை சச்சின் துவேஷிகளும் மேட்ச் தோல்வியான கோபத்தில் சச்சின் தனியாக ஆஸ்திரேலிய பந்தர்களை அற்ப பதர்களாக்கி பந்தாடி 175 (141 பந்துகள், 19 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்) அடிக்க மற்ற பத்து தின்னபோத்து தடிராமன்களும் எக்ஸ்ட்ரா துணையுடன் 172 மட்டுமே அடித்திருப்பதை ரொம்ப கன்வினியண்டாக மறந்து இந்த தோல்வி சச்சினால் மட்டுமே ஆனது போல் ”சச்சின் எப்பவுமே இப்படித்தான், He never finishes”, ”இன்னும் 20 ரன்தானே தள்ளி தள்ளி அடிச்சிருக்கலாமே”, “சரியான சமயத்துல தூக்கி குடுத்துட்டான்” என்று சச்சிநிந்தனை செய்ய ஆரம்பித்து விடுகிறோம்.
இன்று கூட மேட்ச் முடிந்ததும் எழுத்தாளரும், நண்பருமான  சொக்கன் சாட்டில் வந்து வருத்தத்துடன், ஒரு பாட்டம் நம் தோல்வியை பற்றி பேச வந்தார். நான் சச்சின்தான் காரணம் என்று கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமல் சாட்ட, “யூ டூ ப்ரூட்டஸ்” என்று சொல்லாத குறையாக அழுகையுடன் சாட்டில் பதில் கூட சொல்லாமல் மூடு இன்னும் ஆஃப் ஆனதில் ஆஃப்லைனாகி காணாமல் போனார்.

அதற்கு பிறகுதான் கொஞ்சம் யோசித்து பார்த்தேன்.

உண்மை என்ன? சச்சினாலா நாம் தோற்றோம்? சச்சின் நன்றாக ஆடியதால் மட்டுமே நாம் 150, 160 என்று எல்லா ஆளும் அவுட்டாகாமல், கிட்டத்தட்ட வெற்றிபோல கொண்டாடப்படவேண்டிய வெறும் 3 ரன் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறோம்.

சச்சின் எப்படி அவுட் ஆனார்? இளம் வீரர் மற்றும் டென்ஷன் பேர்வழியான ஜடேஜாவை டென்ஷனில் இருந்து காப்பாற்ற மீதமுள்ள ரன்களை தானே எடுத்து விடலாம் என்ற முயற்சியில்தானே? அவர் விரட்டிய பந்து வாட்சன் கையில் விழாமல் பவுண்டரிக்கு போயிருந்தால் (ஓரிரு மீட்டர்தான் வித்தியாசம், இன்னும் சரியாக தட்டியிருந்தால் பவுண்டரிக்குதான் பந்து போயிருக்கும்) ”சூப்பர் ஷாட்” என்று அவரை கொண்டாடியிருக்க மாட்டோம் நாம்?

சச்சின் டென்டுல்கர் என்ன சாதாரண கிரிக்கெட் வீரரா?

* இந்த மேதை ஆட்டக்காரர்தான் கடைசி ஓவரில் 4 எடுத்தால் தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி என்ற நிலையில் பந்தை பிடுங்கி தானே அந்த ஓவரை போட்டு இந்தியாவுக்கு ஹீரோ கப் வாங்கித்தந்தவர்

* இவர்தான் 1999-ல் உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் நடந்தபோது தன் தந்தை மரணம் அடைந்த துக்கம் தீருவதற்குள் ஈமக்கிரியைகள் முடிந்தவுடன் மீண்டும் நாட்டுக்காக விளையாட விமானம் ஏறியவர்

* இவர்தான் தன்னந்தனி சேனையாக ஷார்ஜாவில் ஆஸ்திரேலியர்களை கதிகலங்க அடித்தவர்

* இவர்தான் யாருமே பெறாத அளவுக்கு ஆட்டநாயகன் விருதுகளை பெற்றவர் (ஆட்டத்தின் வெற்றியில் முக்கிய பங்கு இல்லையென்றால் ஆட்ட நாயகன் விருது எப்படி கிடைக்கும்?)

* கிட்டத்தட்ட 159 டெஸ்ட் மேட்ச்சுகள், 435 ஒருநாள் பந்தயங்கள் என்று விளையாடி தன் வாழ்நாளில் 1000க்கும் மேற்பட்ட நாட்களை நம் மிகவும் விரும்பும் விளையாட்டுக்கு அளித்தவர்

அவருடைய சிறப்பான ஆட்டத்தை பாராட்டாமல் அவர் அவுட்டானதுதான் நம் தோல்விக்கு காரணம் என்று நான் சொன்னதில் கொஞ்சமும் நியாயம் கிடையாது. தோல்வி தந்த கோபத்தில் நான் அப்படி அநியாயமாக சச்சினுக்கு எதிராக பலமுறை நினைத்தும், பேசியும் இருக்கிறேன். இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

(Thanks to: http://www.sathyamurthy.com/2009/11/06/did-we-lose-because-of-sachin/)

இன்று மேட்ச் முடிந்த பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் சச்சின் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அவர் முகத்தில் ஆட்டநாயகன் விருது பெற்ற மகிழ்ச்சி இல்லை. அவருக்கு தான் எடுத்த 175 பெரிதாக தெரியவில்லை, எடுக்காத மூன்றுதான் முகமெங்கும் இருந்தது.

Thursday, November 5, 2009

சச்சின் - ’ரெக்கார்டு’க்காக விளையாடுபவர்

கிரிக்கெட் ரசிகர்களே.!

இந்த பதிவை நான் எழுத ஆரம்பித்த போது இந்தியா அணியின் ஸ்கோர் 333-7., அதாவது சச்சின் அவுட் ஆனதற்கு பிறகு எழுத ஆரம்பித்தேன் (இந்தியா அணி தோற்றுவிடும் என்பது எனது மனதுக்கு முன்னதே தெரியும் போல.!!!)

தோல்வியை பற்றி வருத்தப்பட நான் விரும்பவில்லை. ஏனெனில் நான் மேட்ச் பார்க்க ஆரம்பிக்கும் பொழுது 350-லாம் நம்ம டீம் அடிக்காது! அதுனால் இது ஒரு ஒன் ஸைட் மேட்ச்., அப்படி தான் நெனச்சேன். ஆனா நடந்தது வேர.!!


சச்சின் - இவர பத்தி பேசாதவங்களே கிடையாது?! அவரு 100 ரன் அடிச்சாலும் திட்டுவாங்க! 0 அவுட் ஆனாலும் திட்டுவாங்க!! பாவம்!!! 


இன்னைக்கும் அப்படி தான் மேட்ச் ஆரம்பிச்சது! பர்ஸ்ட் 3,4 ஓவெர் வரைக்கும் சச்சின் தட்டி தான் ஆடுனார். பார்க்கிற எல்லாரும் என்ன நெனச்சுருப்பாங்கன்னா, சேவாக் நல்லா ஆடுரார்., ஆனா சச்சின் ’7’ ரன் எடுத்து ரெக்கார்டு-க்காக் விளையாடுரார்., இப்படியெ நெனச்சு தான் நாம மேட்ச தோத்தோம்.!!

சச்சின் மாதிரி சேவாக், கம்பீர், யுவராஜ், தோனி, ஹர்பஜன் எல்லாரும் அவசர படாம விளையாடிருந்தா மேட்ச்சோட முடிவே வேர.! இன்னைக்கு சச்சின் ஒவ்வொரு ஷாட்டும் பெர்பெக்கடா அடிச்சார். ஒரு குறை கூட இல்ல. அது மட்டும் இல்லாம் அவர் ஒரு கோச் மாதிரி செயல்பட்டு ரெய்னா-வ நல்லா ஸ்கோர பண்ண சொன்னார்.

அவர் மட்டும் நெனச்சு இருந்தா ’பவர் பிலே’ முன்னடியே வாங்கி 200 அடிச்சிருக்க முடியும்., ஆனா டீம் ஜெயிக்கனும், ஹர்பஜன், பிரவீன் அடிக்கனும் அப்படின்னு நெனச்சு தான் அவர் அத விரும்பல. அது மட்டும் இல்லாம் ஜார்ஜா மேட்ச் மாதிரி இதுலயும் கடைசில் அவுட் ஆகிட்டார். உடனே எல்லாரும் திட்டிதீர்த்துருப்பாங்க!!!

என்னத்த சொல்ல! இது தான் நடக்கும்னு முன்னாடியே தெரிஞ்சு இருந்தா அந்த மனுசனும் முன்னடியே சேவாக் மாதிரி 30 (அ) 40 ரன் மட்டும் எடுத்து அவுட் ஆகிருப்பான்.


இன்னமும் கூட சச்சின் 17,000 ரன்னை கடந்ததுக்காக பாராட்டாம ! அவர எத்தனை பேர் திட்டுராங்களோ!!! பாவம்யா அந்த மனுசன்!

(பழமொழி: இந்த உலகம் வாழ்ந்தாலும் ஏசும்.! தாழ்ந்தாலும் ஏசும்!!!)


இன்னமும் ”சச்சின் ரெக்கார்டுக்காக தான் விளையாடுரார்” சொல்ற ஜென்மங்களெல்லாம் திருந்துமா?!!!



SR Tendulkar - 2nd innings
Right-hand batsman

Runs: 175
Balls faced: 141
Strike rate: 124.11
Scoring shots: 88

0s 53
1s 56
2s 8
3s 1
4s 19
5s 0
6s 4
7+ 0


9 runs
2x4 0x6
3ss
22 runs
4x4 0x6
10ss


23 runs
3x4 0x6
13ss

16 runs
0x4 0x6
14ss
13 runs
2x4 0x6
7ss

35 runs
4x4 1x6
15ss


36 runs
3x4 2x6
15ss
21 runs
1x4 1x6
11ss

off-side
81 runs
10x4 2x6
38ss

on-side
94 runs
9x4 2x6
50ss

சச்சின் vs பொவுலர்கள்

v Bowler0s1s2s3s4s5s6s7+DismissalRunsBallsSR
BW Hilfenhaus199216000
4036111.11
DE Bollinger812102000
2221104.76
CJ McKay109203000caught2524104.16
SR Watson129102010
2525100.00
NM Hauritz19001020
2513192.30
AC Voges15001010
158187.50
MEK Hussey53204000
2314164.28



டச்சிங் கமெண்ட்:  அதிக மேன் ஆப் தி மேட்ச்., 175 ரன்ஸ்., 17 ஆயிரம் ரன்களை கடந்தவர், ஆஸிக்கு எதிரா 14 சதம், இந்திய மன்னில் 6 ஆயிரம் ரன்களை கடந்தவர், ஆஸிக்கு எதிரா இந்தியர் ஒருவரின் அதிக பட்ச ரன் 175, இத்தனை சாதனையும் ஒரே நாளில் நிகழ்த்திய "சச்சின்" -  ஒரு ஒன் மேன் ஆர்மி தான் உண்மையிலேயே!!!