ஒரு வகுப்பில் ஆசிரியை ஆண்பால், பெண்பால் இவற்றைப் பற்றி கற்பித்துக் கொண்டிருந்தாள்..
மனித இனத்துக்கு அப்பால் ஆங்கில மொழியில் எவை எவைக்கு பாலின பாகுபாடு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெளிவாக விளக்கிக் கொண்டு இருந்தார். சூறாவளிகள், நீர் ஊர்திகள் இவற்றிற்கும் பெண்பாலிட்டு குறிப்பிடப்படுவது ஏன் என்று பாடம் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மாணவன் ஒரு சந்தேகத்தை எழுப்பினான்..
" கணினி " - ஆணா... பெண்ணா..?
ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை.. எனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினாள்..
மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்.... அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ...
1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..
2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..
3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..
4) எந்த நேரத்துல புகையும்... எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது..
5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்....!
அப்பா.. நடக்கும் தெருவெல்லாம்
வாழ்வின் பாடங்களை கற்பிப்பார்..
வானத்தின் மேகப் பூக்களை கூட
யானையாகவும் குதிரையாகவும்
பார்க்க சொல்லி வளர்த்த அப்பாக்கள் எப்படியோ
மறந்தே போகிறது – பிள்ளைகளுக்கு(?)!!
மீன் வாங்கினால்
பூ வாங்கினால்
தெருவில் பழம் விற்கும் மூதாட்டியிடம்
பழம் வாங்கினால் கூட
அவர் பாவமென்று கொடுத்த அதிக பணத்திலிருந்து தானே
ஏழைக்கான கரிசனம் எனக்கே பிறந்திருக்கும்(?)!!
அவர் மார்பில்படுத்து உறங்கிப் போன நாட்கள்,
அவர் காலழுத்திவிட்டு
கால்மாட்டில் தூங்கிப் போன நாட்கள்,
சிலவேளை -
அப்பா பாவமென்று உறங்காமலே அழுத்திக் கொண்டிருக்க
நடுஜாமத்தில் எழுந்த அப்பா
‘ஐயா…’ என்னய்யா இது படுக்கலையா’ என்று தன்னை
நெஞ்சுறுக அழைத்து அணைத்துக் கொண்ட நாட்களெல்லாம்
கோடான கோடி விருதுகளை
அப்பா யெனும் ஒரு வார்த்தையில்
புதைத்துத் தானே கொள்கிறது(?)!!
‘ழா‘ எழுது
அரிச்சுவடி படி
ஆத்திச்சூடி தெரிந்து கொள்
வாய்ப்பாடு சொல்
திருக்குறள் ஒப்பி என்றெல்லாம்
அவர் வளர்த்த தமிழில் அவைகளை கடந்து
என்றுமே பெருமைக்குரிய சொல்
அம்மாவோடு சேர்த்து அப்பா.. அப்பா மட்டும்.. தானே(?)!!
எங்கு தன் பிள்ளைகள் எதற்கேனும் ஏங்கி
பிறர் வீட்டில் போய் நிற்குமோ,
ஊரார் பார்த்துவிட்டால் -
தன் பிள்ளைகளுக்கு கண்பட்டுவிடுமோ’ என்றெல்லாம்
தின்பண்டங்களை கூட தன் வேட்டியிலோ
வேறு துணி போட்டு மூடியோ -
மறைத்து மறைத்து வாங்கிவந்த அப்பா எனும் வரம்
எப்படித்தான் ‘கடைசி வரை இல்லாமலே போகிறதோ(?)!!
தமிழை திருத்தமாக படி
தமிழை திருத்தமாக பேசு
ஆங்கிலம் அவசியமெனில் கற்றுகொள்
பிறமொழி பேசும் திறனை வளர்த்துக் கொள்
அதற்காக மம்மி டாடி என்றழைக்காதே..
காலையில் எழுந்து விடு
உழைக்க பழகிக் கொள்
பொய் சொல்லாதே
பயம் தோல்வியை தரும்
நியாயத்தை தட்டி கேள்
அவசியத்திற்கு கோபம் கொள்
அசிங்கமாக பேசாதே
பிறர் இகழ நடக்காதே
ஒருபோதும் பிறரை ஏமாற்றாதே
நீ பெரிய ஆளாக வருவாய்……….. ‘என்றெல்லாம்
நம்பிக்கையையும் -
போதனைகளையும் கொடுத்த அப்பா…
வாழ்வெல்லாம் எனை
எனக்காய் தலைமேல் சுமந்த
குருவிற்கு ஒருபடி மேலன்றி வேறென்ன(?)!!
‘அப்பா ஜாமின்ரி பாக்ஸ் வேணும்பா’
“அப்படின்னா என்னப்பா???”
‘பேனா பென்சிலெல்லாம் வைப்போமே அதுப்பா’
‘ஹாங்.. டப்பாவா ???”
‘டப்பா இல்லப்பா அதுல வேற காம்பஸ், ஸ்கேல், எல்லாம் இருக்கும்பா”
‘அதலாம் எனக்கு தெரியாதுப்பா
படிக்க உயிரு வேணுமா எடுத்துக்கோப்பா – ஆனா நல்லா படிப்பா
அது போதுமப்பா’ என்று சொன்ன அப்பாக்கள் -
அந்த ஜாமின்ரி பாக்ஸ் தொலைந்தாலும்
புத்தகம் கிழிந்தாலும்
அதன் நினைவாகவும் படிப்பாகவும்
நம் பெயருக்கு – முன்னும் – பின்னும்
இருந்துக் கொண்டே இருக்கிறார்கள்!!
அன்பின் அடையாளம் முத்தம். முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோது நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.
முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
நியூயார்க் பல்கலைக்கழகம் அங்குள்ள மக்களிடம் முத்தம் பற்றி நடத்திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அவை:
* பெண்களை பொறுத்தவரை, அவர்கள் தங்கள் இணை உடனான முத்தங்களை வாழ்க்கையில் ஒரு அங்கமாக கருதுகிறார்கள்.
* தங்களது அன்பையும், மகிழ்ச்சியையும் முத்தத்தின் மூலமே பெண்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர் அல்லது பகிர்ந்து கொள்கின்றனர்.
* தம்பதிகள் இடையேயான நீண்டகால உறவு பலமாக இருப்பதற்கு அவர்களுக்குள் நடைபெறும் முத்த பரிமாற்றமும் ஒரு முக்கிய காரணம். செல்போனில் நீண்டநேரம் பேச அடிக்கடி சார்ஜ் செய்வது போல், தம்பதியர் இடையே இணக்கமான உறவு இருக்க வேண்டுமானால் அவர்களும் அடிக்கடி முத்தம் கொடுத்துக் கொள்ள வேண்டும்.
* முத்தத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுபதில்லை. திருமணத்திற்கு முன்பு காதலியிடம் முத்தத்தை பெற துடிக்கும் அவர்கள், திருமணத்திற்கு பிறகு, மனைவியே முத்தம் கொடுக்க தேடி வந்தாலும் கூட வேண்டாவெறுப்பாகத்தான் அதை ஏற்றுக் கொள்கிறார்களாம்.
* ஆண்களை பொறுத்தவரை, செக்ஸ் உறவின் போது பயன்படுத்த தேவையான சாவியாக மட்டுமே முத்தத்தை கருதுகிறார்களாம்.
* ஆண்கள், தங்கள் துணைக்கு முத்தம் கொடுக்க முன் வந்தால், அவர்களது எதிர்பார்ப்பு அவளுடன் செக்ஸ் உறவு வைக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது. மற்ற மகிழ்ச்சியான தருணங்களில் அவர்கள் முத்தத்தை துணையுடன் பரிமாறிக் கொள்ள பெரும்பாலும் தவறிவிடுகிறார்களாம்.
* முத்தம் விஷயத்தில் ஆண்கள் தேமே… என்று ஒரு புறம் இருக்க… இந்த முத்த இன்பத்தை அணு அணுவாய் ரசிப்பதிலும் கொடுப்பதிலும் பெண்கள்தான் `டாப்.’
* ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதுபோல், முத்தம் கொடுப்பதும் நாளடைவில் ஆண்களுக்கு சலித்து போய்விடுகிறதாம். ஆனால், பெண்கள் மட்டும் அதற்கு நேர் எதிராக இருக்கிறார்கள். முத்தத்தை புத்துணர்வு தரும் விஷயமாக அவர்கள் கருதுவதுதான் அதற்கு காரணம்.
* தாம்பத்ய உறவின் போது ஒரு ஆண் நினைத்தால், துணையை முத்தமிடாமலேயே உறவை வெற்றிகரமாக முடித்துக் கொள்ள முடியுமாம். ஆனால், பெண்களால் அது முடியாதாம். அவர்கள், முத்தம் கொடுக்கக்கூடாது என்று உறுதியாக முடிவெடுத்து உறவில் ஈடுபட்டால்கூட, அதை மறந்து தங்களை அறியாமல் துணைக்கு முத்தமிட்டு விடுவார்களாம்.
* தாம்பத்ய உறவில், தன் துணையை பலவாறு முத்தமிடுவதன் மூலமே அந்த உறவில் ஒரு திருப்தியான நிறைவை பெறுகிறாளாம்.
- இப்படி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அள்ளித் தந்து இருக்கிறது, இந்த அமெரிக்க ஆய்வு.
ஆனால், நம் பெண்கள் எப்படி…? அவர்களின் ஆழ்மனத்திற்கு மட்டுமே அது வெளிச்சம்!
காதல் என்றால் என்ன? காதல் சரியா தவறா? காதலிப்பது சரியா தவறா? என்பன என்றைக்கும் புதிதாகத் தெரிகிற பழைய கேள்விகளே.
‘இப்படிப்பட்டதுதான் காதல்’ என்று யாராலும் கட்டம் கட்டி இலக்கணம் சொல்லி விட முடியாது என்பதுதான் காதலின் சிறப்பம்சம். காதல், சிலருக்கு அமிர்தம். சிலருக்கு விஷம்! சிலருக்கு அது புனிதம், நம்பிக்கை, ஏகாந்தம். வேறு சிலருக்கோ அது... புதிர், ஏமாற்றம், பயம், இவ்வாறு காதல் எல்லோரிடத்திலும் ஒவ்வொருவிதமான உருவெடுத்துக்கொள்ளும்.
ஏன், இப்படி காதலின் முகம் ஆளாளுக்கு மாறுபடுகிறது? அதை அமிர்தமாகவோ, விஷமாகவோ மாற்றுவது எது? நம்பிக்கையான காதலின் நிறம் என்ன? ஏமாற்றம் தரும் காதலின் உருவம் என்ன? என்பதும் கேள்விக்குறியே. ஆனாலும் அது ஒவ்வொருவரது மனநிலையைப் பொறுத்து உருவெடுத்து அமைகிறது என்பது சிலரது கருத்து.
காதல் என்பதே ஒரு வகையில் திட்டமிடுதல்தான். ‘எனக்கு எப்படியும் யாராவது ஒருவன் கணவனாக வரப் போகிறான். என்னை ஓரளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிற, எனக்காக இவ்வளவு செய்யும் நீயே, என்னில் இவ்வளவு அக்கறை கொள்ளும் நீயே, எனக்காகவே வாழும் நீயே அந்த ஒருவனாக இருந்தால் நல்லதுதானே’ என்று மனம் போடும் கணக்கு, காதலின் முக்கியக் கூறு! இது ஆண்களுக்கும் பொருந்தும்.
அவன் எவ்வளவு சம்பாதிக்கிறான், என்ன வாகனம் வைத்திருக்கிறான், அவன் வீட்டில் எத்தனை பேர் என்பதையெல்லாம் சேர்த்து அந்தக் கணக்கைப் போடுவதில் எந்தத் தவறும் இல்லை. ‘பிரதிபலன் பார்க்காமல் வருவதுதான் உண்மையான காதல். கணக்குப் பார்ப்பது காதலுக்கே களங்கம்’ என்றெல்லாம் இளைஞர்களிடம் பரவலாக இருக்கும் உணர்ச்சிவசப்பட்ட வாக்கியங்கள்தான்.
கல்லூரிப் பருவம் என்றதுமே கூடவே வந்து விடுகிறது, காதல்! இனக்கவர்ச்சி ஆபத்தில் சிக்கி பலரும் திசைமாறிப் போய்விட, காதலை ஆக்கப்பூர்வமான ஒரு சக்தியாக பயன்படுத்தி வாழ்க்கையில் ஜெயித்த காதலர்களும் இருக்கின்றார்கள்,
நம் தமிழ்க் கலாச்சாரத்தில் பெண் என்றாலே அவள் தனக்குப் பிடித்தக் காதலைக் கூட முதலில் மறுத்து, பிறகுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற செயற்கையான லாஜிக் இருப்பதால், ‘மனம் துணிந்து காதலைச் சொன்னால் அது வெற்றியாக முடிந்தே ஆக வேண்டும்’ என்ற உளவியல் அழுத்தம் பெண்கள் மத்தியில் தோன்றிவிடுகிறது.
‘காதலைப் பொறுத்தவரை பெண்தான் தேர்ந்தெடுப்பவளாக இருக்கவேண்டும். ஆண் என்பவன் அவள் முடிவுக்கு அடிபணிபவனாக இருக்க வேண்டும்’ என்ற எதிர்பார்ப்பே, ஆணாதிக்கம் போன்ற ஒருவித ஆதிக்க உணர்வுதான். பணிவது, பணியவைப்பது என்பதையெல்லாம் தாண்டிய பரஸ்பர அன்புதானே காதல்?
ஒரு பெண்ணுக்கு பிடித்தவன், பிடிக்காதவன் என்று இருப்பதுபோல ஆணுக்கும் இருக்கும்தானே? தன்னிடம் காதல் சொல்லும் பெண்ணையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அவனைக் காதலன் என்று சொல்வதா... இல்லை, பெண்பித்தன் என்று சொல்வதா?
சிலர் நினைக்கலாம். ஆணும் பெண்ணும் சகஜமாக பழகுவது என்பது தவறே இல்லை. அதைக் கூடாது என்று கண்டிப்பது பிற்போக்குத்தனம்தான். ஆனால், எதற்குமே ஒரு எல்லை இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. பெண்களே நீங்கள் ஒரு ஆணோடு களங்கமில்லாமல் பழகுவதுபோலவே அவனும் உங்களோடு பழகுவான் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? தோளில் கை போட்டுக் கொண்டு வலம் வருவது உங்களைப் பொறுத்தவரை நட்பாக இருக்கலாம். ஆனால், நம் சமூகம் இன்று வரை கல்யாணம் செய்து கொள்வதையே ‘கரம் பிடிப்பது’ என்று சொல்கிறது. உங்கள் மனதில் களங்கமில்லை, விரசமில்லை, தடுமாற்றம் இல்லை! ஆனால், நீங்கள் மட்டுமே உலகமில்லை என்பதை மனதில் ஆணி அடித்தாற்போல எப்போதும் நினைத்திருக்கவேண்டும்!
பெண்களே ‘நான் நல்லவளாக இருக்கும்போது, யார் என்னை என்ன செய்துவிட முடியும்?’ என்று கேட்பதை தைரியம் என்று சொல்வதைவிட அசட்டு தைரியம் என்று சொல்வதுதான் சரி. உங்களுடைய பாதுகாப்பு உங்களைப் பொறுத்தது மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கிற ஆண்களின் ஒழுக்கமும் அதில் பங்கு வகிக்கிறது.
நாம் கனவு காண்பது போன்ற, ஆண் &பெண் பேதமில்லாத கலாசாரம் வெளிநாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அவர்களைப் பொறுத்தவரையில் கற்பு என்பதோ, கல்யாணம் என்பதோ, பாலியல் தவறுகள் என்பதோ பெரிய விஷயமில்லை. இரண்டு கல்யாணம், மூன்று குழந்தைகள் என்று இருக்கும் பெண்களையும் வெளிநாட்டில் ஒரு ஆண் காதலிப்பான். அதேபோல பெண்களும் காதலிப்பார்கள்.
இன்னொரு விடயம் காதலில் பொய் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
பொய் என்பது அத்தனை ரசிக்கக் கூடியதா? பொய் சொல்லாமல் காதலிக்க முடியாதா? கவிதைக்குப் பொய் அழகு... சரி, காதலுக்கும் அதுதான் அழகா? & இப்படி ஏகப்பட்ட சந்தேகங்கள், எல்லா காதலர்களின் இதயத்தில் குடிகொண்டிருக்கின்றது.
நம் எல்லோருக்குமே உண்மையைவிட பொய்யின்மீது அதிக ஈர்ப்பு இருக்கத் தான் செய்கிறது. காரணம், உண்மை என்பது எந்த மாற்றமும் இல்லாமல், இருந்தபடியே இருந்துகொண்டு நம்மை ஜீரணிக்கச் சொல்கிறது. ஆனால், பொய் நமக்காகவே உருவாக்கப்படுகிறது. நாமாகவே உருவாக்கிக்கொள்ளலாம். காதலில் ஆண்களே அதிகமாக பொய் சொல்கின்றனர் என்கிறது ஆய்வுகள்.
நமக்குப் பிடித்த மாதிரியான திருப்பங்களை எல்லாம் கொண்டிருக்கிற ஒரு நாவலைப் போல, பொய் நமக்குப் பிடித்தமான எல்லா அம்சங்களோடும் ஜோடிக்கப்படுகிறது. அதனால்தான் அதை ரசிக்க முடிகிறது. சினிமாவில் வரும் டூயட் பாடல்கள்கூட ஒருவகையில் பொய்தான். நிஜ வாழ்க்கையில் அப்படி எந்த காதல் ஜோடியும் பாடி ஆடுவதில்லை. அதுதான் நிஜம். ஆனால், அந்த நிஜத்தைவிட டூயட் எனும் பொய் ரசிக்கும்படியாக இருக்கிறது, அல்லவா? அப்படித்தான், பொய் சொல்லும் ஆண்களையும் பெண்கள் ரசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
பொய்களில் பல வகை உண்டு.
எல்லோருக்கும் நன்மை ஏற்படுத்தும் பொய்.
எல்லோரையும் பாதிக்கும் பொய்.
யாரையும் பாதிக்காத, நன்மையும் ஏற்படுத்தாத விளையாட்டுப் பொய்.
நமக்கு மட்டும் நன்மையையும், மற்றவர்களுக் கெல்லாம் பாதிப்பையும் ஏற்படுத்துகிற பொய்!
இப்படி, அதன் பட்டியல் நீளும். சின்னதொரு பொய்கூட சொல்லாமல் ஒரு மனிதன் தன் வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பது மிகமிகக் கடினம். ஆனால், அது எப்படிப்பட்ட பொய் என்பதுதான் கவனிக்கவேண்டியது. வள்ளுவர்கூட,
‘பொய்மையும் வாய்மையிடத்தே புரைதீர்த்த
நன்மை பயக்கும் எனில்’
என்று சொல்லியிருக்கிறார். ஆம், பொய்களாக இருந்தாலும், நன்மையை தந்தால், அவை உண்மைக்கு சமமானதே. உண்மையாக இருந்தாலும், அடுத்தவரை துன்பப்படுத்தினால் அவை பொய்க்கு நிகரானதே.
காதலின் கெட்ட குணம் பொய் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவனை பிடித்துப் போகும் வரைதான், அவன் செய்யும் நல்லது கெட்டது பற்றிய ஆராய்ச்சியெல்லாம். அதன் பிறகு மனம் ஏதாவது ஒரு குருட்டுக் காரணம் சொல்லி அவன் செய்கையையெல்லாம் நியாயப்படுத்திக் கொண்டிருக்கும்.
காதலுக்குள்ளும் இல்லறத்துக்குள்ளும் பொய் உலவுவது என்றைக்கிருந்தாலும் ஆபத்துதான். ‘சின்னப் பொய் தானே’ என்ற சமாதானம் அர்த்தமற்றது. அடுத்தவரை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு சொல்லப்படும் எல்லா பொய்யுமே பெரிய பொய்தான். எனவே காதலர்களே, தம்பதிகளே ஒருவருக்கொருவர் உண்மையைப் பேசி காதலியுங்கள். உங்கள் வாழ்க்கை இனிமையானதாக அமையும்.
அடுத்து, சில ஆண்கள் பெண்களிடம் மிகவும் தாழ்வான எண்ணத்தை கொண்டிருப்பார்கள்.
எப்படிப்பட்ட பொண்ணாக இருந்தாலும் சரி நாலு வரி புகழ்ந்து பேசினா போதும். நம்பளையே சுத்தி சுத்தி வருவாங்க’ என்று நினைப்பினைக் கொண்ட ஆண்களும் இப்பூவுலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். தப்பில்லை அப்படி ஆண்கள் நினைப்பதற்கு காரணமாக சில பெண்களும் நடப்பதனாலேயே ஆண்களிடம் இவ்வாறான எண்ணங்கள் நிலைகொண்டிருக்கின்றன.
‘நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க’ ‘இந்த ட்ரஸ் உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு’ ‘உங்க குரல் இருக்கே.. ஸ்வீட்டோ ஸ்வீட்!’ உங்கள் கூந்தல் ரொம்ப அழகாக இருக்குது
பெண்களை ‘காதல் கடலில் வீழ்த்த’ இப்படி ஏகப்பட்ட வாசகங்களை சில ஆண்கள் பயன்படுத்துகின்றனர். பெண்களும் புகழ்ச்சியின் உச்சத்தால் கண்மூடித்தனமாக காதல் கடலில் மூழ்கின்றனர். பெண்கள் ‘எல்லோருமே’ வர்ணனைக்கு மயங்குகிறவர்கள் என்று ஒரு சிலர் இப்படி மெத்தனமாகப் பேசிக் கொண்டு திரிவதற்குக் காரணம் இருக்கிறது. தங்கள் அறியாமையாலும் எதையும் எளிதாக நம்பிவிடும் வெகுளித்தனத்தாலும் இன்றுவரை இப்படிப்பட்ட ஆண்களின் வலையில் சிக்கிக் கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
ஆனால், எவனோ ஒருவன், தேவையில்லாமல் நம்மிடம் வர்ணனைகளை வார்க்கிறான்.. பொய் பொய்யாகப் பொழிகிறான் என்றால், ‘அவன் நோக்கம் என்னவாக இருக்கும்..’ என்பதை பெண்கள் சிந்திக்க வேண்டும். இனிமேலாவது சிந்திப்பார்களா பெண்கள் என்பது கேள்விக்குறியே. ஏனெனில் காதலை எடுத்துக்கொண்டால், பெண்மனம் இலகுவில் ஏமாறும் மனம். ஆணின் மனம் குரங்குமனம்(எப்போ இன்னொரு கிளை தாவும் என்பது ஐயமே)
உங்களை கல்யாணம் செய்ய விரும்புகிறவன் என்றால், அவன் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கூசும் அளவுக்கா வர்ணிப்பான்? சிந்தியுங்கள் பெண்களே..!
அதற்காக, உங்களைச் சுற்றி இருக்கும் அப்படிப்பட்ட வர்ணனை பார்ட்டிகளை ஒவ்வொரு முறையும் கன்னத்தில் அடித்து அவமானப்படுத்தத் தேவையில்லை. பொய் என்று தெரிந்தாலும் நம்மைப் பற்றி உயர்வாக ஒருவர் பேசும்போது, ஒருவித உற்சாகம் மனதில் பிறக்கத்தான் செய்யும். ஒரு சின்னப் புன்னகை, ஒரு ‘தங்க்யூ’ போன்றவற்றால் அவர்களை சமாளித்து, கடந்தும் விடலாம்.
அதை விட்டுவிட்டு, போயும்போயும் ஒரு வெற்றுப் புகழ்ச்சிக்காக வாழ்க்கையையே ஒருவனிடம் ஒப்படைக்கும் அளவுக்குப் போவதில், எந்தவித அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. என்ன செய்ய.. ஒருசிலர் காதலில் ஆண்களின் வர்ணனைக்கு ஆட்கொண்டு தம் வாழ்க்கையை அழித்த பெண்களும் உள்ளனர்.
ஒரு பெண், ஒரு அந்நிய ஆணிடம், ‘நீ மன்மதன் மாதிரி இருக்கிற.. உன்னுடைய கண் ரொம்ப அழகு.., மீசை வீரமானவன் என்று சொல்லுது, தோள்கள் அழகாக இருக்குது ’ என்றெல்லாம் வர்ணித்து, அவனை மகிழ்ச்சிப்படுத்துவது இல்லை! ‘தனக்கானவனிடம் மட்டுமே அப்படி நடந்து கொள்ளவேண்டும்’ என்று தனக்குள்ளாகவே ஒரு ஒழுக்கத்தை வகுத்துக் கொண்டு காதலிக்கிறாள், வாழ்கிறாள். ஆனால் அந்த ஒழுக்கம் ஆணிடமும் இருக்க வேண்டாமா? அந்நியப் பெண்களை வர்ணிக்கும் ஆண்களையெல்லாம் அந்த ஒழுக்கத்தை மீறியவர்களாகக் கருதிக் கொள்வதில் ஒன்றும் தவறில்லையே.
காதலில் ஆண்கள் உன்னையே காதலிக்கிறேன் உன்னையே திருமணம் செய்துகொள்வேன் என நம்பவைத்து எல்லைமீறிவிட்டு ஆளே காணாமல் போயிடுவார்கள்.
பெண்களே..!உங்களை நோக்கி வீசப்படுவது தூண்டிலா, தூய அன்பா என்பதைத் துப்பறிந்து தப்பித்துக் கொள்வது தான் இந்த வயதில் உங்கள் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் சவால்!
பெண்களைப் பொறுத்தவரை பயந்தாங்கொள்ளி பட்டாம்பூச்சியாக சிறகடித்து பறக்காதீர்கள். உணர்ச்சிகளை தற்காத்து கொள்வதிலும், போராடுவதிலும், பெண் என்பவள் தேனீயாகவே வாழவேண்டும்.
இதோ காதலித்துக்கொண்டிருப்பவர்களுக்காக ஒரு சின்ன கதை.
காதலியைப் பிரிந்து போர்க்களத்தில் இருந்த ஒரு ராணுவ வீரனுக்கு அவன் காதலியிடமிருந்து ஒரு கடிதம். ‘நீ சென்ற பிறகு எனக்கு ஒரு BoyFriend கிடைத்தான். அவனைத்தான் நான் மணக்கப் போகிறேன். அதனால், உன்னிடம் உள்ள என் புகைப்படத்தை திருப்பி அனுப்பிவிடு’என்று அதில் எழுதியிருந்தது.
அவளுக்கு பதிலடி கொடுக்க நினைத்த அவன், சக வீரர்களின் காதலி, தோழிகள் என்று பல பெண்களின் புகைப்படங்களையும் சேகரித்து, அவற்றோடு அந்தக் காதலியின் புகைப்படத்தையும் சேர்த்து அனுப்பினான். கூடவே, ஒரு கடிதம்... ‘உங்கள் கடிதம் கிடைத்தது. எவ்வளவு யோசித்தும் உங்கள் முகம் எனக்கு ஞாபகம் வரவேயில்லை. அதனால் நான் இதுவரை சந்தித்த எல்லா பெண்களின் புகைப்படத்தையும் அனுப்பி உள்ளேன். உங்கள் படத்தை எடுத்துக் கொண்டு, மற்றதை திருப்பி அனுப்பி விடவும்!’’
நம்மைப் புறக்கணிப்பவர்களுக்கு சரியான தண்டனை நாம் அவர்களைப் புறக்கணிப்பதுதான். அவன் நல்லவனோ... கெட்டவனோ, கெட்டவன் என்று நினைத்துக் கொள்வதுதான் நமக்கு நல்லது.
‘கிட்டாதாயின் வெட்டென மற’. அவ்வளவுதான்!
‘‘காதலுக்கு கண்ணில்லை என்பது உண்மையோ இல்லையோ மூளையில்லை என்பது உண்மை’’
1930களில் லண்டன் செய்திதாள்களில் “He is Out” என்ற வரி தென்பட்டால் யாரோ ஒரு அதிர்ஷ்டசாலி பந்துவீச்சாளர் பிராட்மெனை அவுட் ஆக்கிவிட்டார் என்று மக்கள் புரிந்துகொள்வார்களாம். தொண்ணுறுகளிலும் இந்த நூற்றாண்டிலும் “Another ton for him” என்ற வரி எங்கு தென்பட்டாலும் மிகச்சுலபமாக புரிந்துகொள்ளமுடியும் சச்சின் மற்றொரு சதம் அடித்திருக்கிறாறென்று. இவ்வளவு சதங்களை குவிக்கிறாரே சதம் அடிப்பது மிக எளிதான செயலோ என்று கிரிக்கெட் தெரியாதவர்கள் தவறாக நினைக்கும் அளவிற்கு நூறு ரன்களை சச்சின் மிக எளிதாகவும் அழகாகவும் கடந்து நிற்பார். ஆனால் இதற்கு பின்னாலிருக்கும் உழைப்பும்,அர்ப்பணிப்பும் மிக அதிகம் என்பதை சச்சினை பற்றி தெரிந்தவர்கள் மட்டுமே புரிந்துகொள்வார்கள். கிரிக்கெட்டை மட்டுமே சுவாசமாக கொண்டு வாழ்பவர் சச்சின்.
95 முறை சர்வதேச போட்டிகளில் நூறு ரன்களை கடப்பதென்பது மிகக்கடினம். பல்வேறு மைதானங்கள்,பவுலர்கள்,பிட்சுகள்,சிதோஷ்ண நிலை இவை அனைத்தையும் தாண்டி தன் சாதனை பயணத்தை தொடர்கிறார். அவரது உடலில் காயங்கள் இல்லாத இடமே இல்லை எனலாம். டென்னிஸ் எல்போவால் பாதிக்கப்பட்டபோது இனி சச்சின் அவ்வளவுதான் என்றார்கள். பீனிக்ஸாக மீண்டு வந்தார்.
கிரிக்கெட் விளையாடும் சர்வதேச வீரர்கள் அனைவரும் எப்படியாவது உலகின் மிகச்சிறந்த "இரண்டாவது" டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்கிற இடத்துக்குத்தான் போட்டியிடுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு தெரியும் எப்பொழுதும் முதலிடம் ஒருவருக்குத்தான். அது டான் பிராட்மென். அவரது சராசரியை முறியடிக்க இன்றுவரை எவரும் பிறந்ததாக தெரியவில்லை. மிஸ்டர் கிரிக்கெட் என்று ஆஸி. வீரர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட மைக்கேல் ஹஸ்ஸி 80க்கும் மேல் சராசரியுடன் பிராட்மெனை எட்டிப்பிடிக்க ரன்கள் குவித்துகொண்டிருந்தார். உச்சிக்கு ஏறிய வேகத்தில் கீழே இறங்கி அமைதியாகிவிட்டார்.
ஒருநாள் போட்டியில் நம்பர் 1 வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் என்பதில் எவ்வித சந்தேகமும் எந்த வீரர்களுக்கும்,ரசிகர்களுக்கும் இல்லை. இன்று மேலும் ஒரு வைரம் அவரது கிரீடத்தில். 39 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டியின் பெரும் ஜாம்பவான்களான ரிச்சர்ட்ஸ்,லாரா,கில்கிறிஸ்ட்,மார்க் வா,அன்வர்,ஹெயின்ஸ்,ஜெயசூர்யா,கங்குலி என எல்லோரின் கனவாகவும் இருந்து கடைசி வரை நிறைவேறாமல் போன 200 ரன்களை சச்சின் முதல் வீரனாக தொட்டிருக்கிறார்.
மிகச்சிறந்த அணியான தென்னாப்ரிக்காவுக்கு எதிராக என்பது கூடுதல் சாதனையாக கொள்ளலாம். ஸ்டெயினும்,பார்னலும் உசுப்பேற்றியபோதும் மெளனமாக இருந்தவர் அவரது மட்டையால் பதிலடி கொடுத்தார். காலீஸின் பந்துவீச்சில் வலது புறம் சென்று இடப்பக்கமாக அவர் அடித்த நான்கு ரன்களை இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பாடமாக வைக்கலாம். 194 ரன்கள் கடந்து உலகசாதனை செய்தபோதும் மட்டையை உயர்த்தாமல் அடுத்த பந்தை எதிர்கொள்ள நின்றாரே,போட்டி முடிந்தபின் “இந்த இரட்டை சதத்தை இந்திய மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்றாரே. அதுதான் சச்சின்.
36 வயதில் சச்சின் அடிக்கும் மூன்றாவது மிகப்பெரிய சதம் இது(இதற்கு முன் 2009ல் நியுசிக்கு எதிராக 163*,ஆஸிக்கு எதிராக 175) ரன்னர் இல்லாமல் 200 ரன்கள். ஒரு நாள் போட்டிகளில் அதிக பவுண்டரிகள்(25) என்று சச்சினின் சாதனை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. போட்டியில் எந்த வித தவறும் செய்யாமல் சச்சின் விளையாடியதை பார்த்தபோது கைதேர்ந்த ஓவியனொருவன் மிகவேகமாகவும் நேர்த்தியாகவும் ஓவியம் தீட்டுவதை போலிருந்தது.
சிறிய வயதிலேயே தேசிய அணிக்கு விளையாட வந்துவிட்டதால் சச்சினால் அதிக உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கமுடியவில்லை. ஒருவேளை அப்படி பங்கேற்றிருந்தால் பல பந்துவீச்சாளர்களை இந்தியா இழந்திருக்கும். ஜிம்பாவே அணிக்கெதிரான போட்டி ஒன்றில் சச்சின் விக்கெட்டை எடுத்தவுடன் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து கும்மாளமிட்டார் ஒலாங்கோ. அடுத்த போட்டியில் அவரது பந்துவீச்சை சச்சின் அடித்த அடியில் ஒலாங்கோ அணியை விட்டே போனார்.
2002ல் சேவாக் புகழின் உச்சியில் இருந்த சமயம். இந்தியாவுக்கு எப்படியும் 2003 உலககோப்பையை அவர் வாங்கித் தந்துவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தபோது பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. அந்த உலக கோப்பை போட்டிகள் அனைத்திலும் சேவாக் சோபிக்கவில்லை. உலககோப்பைக்கு முன்புவரை அமைதியாக இருந்த சச்சின் ஒவ்வொரு போட்டியிலும் ருத்ர தாண்டவமாடினார். இங்கிலாந்து பந்துவீச்சாளர் வாயாடி கேடிக்கின் பந்தை மைதானத்திற்கு வெளியே அடித்து அதிர செய்தார். அதன் பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சச்சின் அடித்த 98 ரன்களை சாகும் வரை பாகிஸ்தான் வீரர்கள் மறக்கமாட்டார்கள் குறிப்பாக அக்தர்.
முப்பது வயதுக்கு மேல்தான் கவாஸ்கர் பல சாதனைகளை குவித்தார்.ஓய்வு பெறும்வரை பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் ரிச்சர்ட்ஸ். தங்களது கடைசி நாட்களிலும் ரன்களை குவித்தவர்கள் பார்டரும்,ஸ்டீவ் வாக்கும். கடந்த இரண்டு வருடங்களில் சச்சினின் சராசரியும் சதங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இது சச்சினின் “Golden days” என்கிறார்கள் விமர்சகர்கள். அவர் ஓய்வு பெறும் வரை பந்துவீச்சாளர்களின் பாடு திண்டாட்டம்தான். அவரும் ஒரு நாள் ஓய்வு பெற்றுவிடுவார் என்பதை நினைக்கும்போது விழியோரம் நீர்த்துளிர்க்கிறது. நம் காலத்தின் மகத்தான நாயகன் சச்சின். அவர் வாழ்ந்த காலத்திலேயே நாமும் வாழ்ந்தோம் என்பதே பெருமைதானே.
பிராட்மென் விளையாடுவதை நேரில் பார்த்ததை தங்களது வாழ்நாளின் பொக்கிஷமாக கருதியவர்கள் உண்டு. அதேபோல் நாம் சச்சின் எனும் மாபெரும் கலைஞனை சாதனையின் சிகரங்களில் அவன் ஏறியபோது உடனிருந்து பார்த்து மகிழ்ந்திருந்தோம் என்பது எவ்வளவு அற்புதமான விஷயம். இன்னும் நாற்பது ஆண்டுகள் ஆனாலும் கிரிக்கெட் என்னும் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் சச்சின் என்கிற பெயர் எழுதப்படாமல் இருக்காது. கார்ரேஸுக்கு ஒரு ஷுமேக்கர்,டென்னிஸுக்கு ஒரு பெடரர்,கிரிக்கெட்டிற்கு ஒரு சச்சின்.விரைவில் சர் பட்டம் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சச்சினிடம் இனியும் எதிர்பார்க்க என்ன இருக்கிறது? இரண்டு விஷயங்கள் இன்னும் மிச்சம் இருக்கின்றன. ஒன்று, டெஸ்ட் போட்டியில் இதுவரை சச்சின் 300 ரன்கள் அடித்ததில்லை. இரண்டு, இதுவரை எத்தனையோ கோப்பைகளையும் பதக்கங்களையும் ஸ்பரிசித்த சச்சினின் கரங்கள் உலககோப்பையை ஸ்பரிசித்ததில்லை. இந்த இரண்டும் விரைவில் நடக்கும் என்று நம்பிக்கையுடன் இந்த மிகச்சிறந்த வீரனை நம் காலத்தின் நாயகனை வாழ்த்துவோம்.
படித்ததில் பிடித்த சச்சின் வாசகம்:
உலகத்தில் இரண்டு வகையான துடுப்பாட்ட வீரர்கள் இருக்கிறார்கள். ஒரு வகை சச்சின் டெண்டூல்கர். மற்றவகை மிகுதி எல்லாரும்.
சொன்னது அண்டி ஃபிளவர்
" Beneath the helmet, under that unruly curly hair, inside the cranium, there is something we don't know, something beyond scientific measure. Something that allows him to soar, to roam a territory of sport that, forget us, even those who are gifted enough to play alongside him cannot even fathom. When he goes out to bat, people switch on their television sets and switch off their lives."
இந்த வாரம் கண்டிப்பாக சச்சின் வாரம்! ICC விருது, முதல் டெஸ்டில் 98, 38. ரன்கள். டெஸ்ட் போட்டிகளில் 14,000 ரன்களைக் கடந்த முதல் வீரர். இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 214 ரன்களை எடுத்திருக்கிறார்.. இன்று கூட ஆட்டமிழக்காமல் 53* ரன்களை குவித்து வெற்றிக்கு வழிவகுத்துள்ளார் நம் தொடர்(ஆட்ட) நாயகன்...
சச்சினின் 49 ஆவது சதம்! இரண்டு சிக்ஸர் அடித்து சதத்தை நிறைவு செய்தார் சச்சின். சிக்ஸரால் சச்சின் சதமடிப்பது 5 ஆவது முறை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11 ஆவது சதம் மற்றும் ஆறாவது முறை 150 ரன்களுக்கு மேல்! 20 ஆவது முறையாக 150 ரன்களுக்கு அதிகமாகப் பெற்று லாராவின் சாதனையை (19 முறை) முறியடித்திருக்கிறார்.
சச்சின் வாங்காத விருது அனேகமாக ICC Cricketer of the Year விருது மட்டுமே. அந்தக் குறையும் ரசிகர்களுக்குத் தீர்ந்தது. Cricketer of the Year மற்றும் People's Choice Award என இரண்டு விருதுகள்! ICC க்கு நன்றிகள். இன்னும் பல விருதுகள் காத்திருக்கின்றன!
20 வருடங்களுக்கும் மேலாக கிரிக்கெட்டின் மீதுள்ள நேசமும், அர்ப்பணிப்பும் சச்சினுக்கு மேலும், மேலும் புகழ் சேர்க்கிறது. இன்னும் பல சாதனைகளை சச்சின் நிகழ்த்துவார். வாழ்த்துக்கள் சச்சின்!
தனது சாதனைகளுக்காக விளையாடுபவர் என்ற அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு சச்சின் தனது ஈடற்ற திறமையால் எப்போதோ பதில் சொல்லிவிட்டார்.
லவ்வுக்குப் புதுசா? இந்த எட்டு கட்டளைகளைக் கடைபிடித்தால் நீங்கள் காதலில் கிங் / குவீன்!
காதலிக்கச் சொல்லி வற்புறுத்தாதே!
பார்ட்டி காதலிக்கவில்லையா? விட்டுத் தள்ளுங்கள். ஆற்றில் எத்தனையோ மீன்கள் இருக்கின்றன. நாம் விரும்பும் ஆண் அல்லது பெண் உங்களைக் காதலிக்கவில்லை என்பது அசிங்கம் இல்லை. நம்மை அவர்கள் காதலனாகவோ காதலியாகவோ நினைக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைத் துரத்துவதுதான் அசிங்கம். உங்களைக் காதலிக்கும் ஆள் கிடைக்கும் வரை காத்திருங்கள்!
காதலுக்காகத் தன்மானம் இழக்காதே!
காதலிக்காக ரேஷன் கடையில் பாமாயில் கேனுடன் க்யூவில் நிற்பதைவிட அவமானம் என்ன இருக்கிறது? இப்படித்தான் காதலை வெளிப்படுத்தவேண்டும் என்று அவசியம் இல்லை. காதலியின் அன்றாட வாழ்க்கையைப் பற்றி விசாரியுங்கள். அவர் கவலைகளுக்கு ஆறுதலும் தீர்வும் அளியுங்கள்.
உங்கள் அன்றாட அனுபவங்களை, ஊர்வம்புகளை, கவலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். காதலுக்காக உங்கள் மரியாதையைக் குறைக்கும் விதமான செயல்களில் ஈடுபடாதீர்கள். அந்த மாதிரி காதல் ஆபத்தானது!
காதலிக்காகப் பணத்தை வாரி இறைக்காதே!
சினிமா தியேட்டரில் ஒன்றுக்கும் உதவாத படத்திற்கு பர்சை காலி பண்ணி பிளாக்கில் டிக்கெட் வாங்குவது, காதலியின் பிறந்த நாளுக்காகப் பெரிய தொகை கொடுத்து அன்பளிப்பு வாங்கிக் கொடுப்பது - இது போன்ற கெட்ட பழக்கங்கள் காதலுக்கு எதிரி!நீங்கள் இவ்வளவு செலவு செய்தால் சில பெண்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை குறைந்துவிடக்கூட வாய்ப்பிருக்கிறது.
காதலிக்கு ஏதாவது வாங்கித் தந்தே ஆகவேண்டுமா? இப்படி ஆசைப்படுவது சகஜம்தான். அதில் தப்பில்லை. அதற்கான விதிமுறைகளுக்கு 7-ஆம் கட்டளையைப் பாருங்கள்!
அந்த விஷயங்களுக்கு அவசரப்படாதே!
எல்லாவற்றுக்கும் நேரம், காலம் இருக்கிறது என்று பெரிசுகள் சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்? அடல்ட்ஸ் ஒன்லி விஷயங்களில் ஈடுபடுவதற்கு ஆர்வம் ஏற்படத்தான் செய்யும். ஆனால் அவசரப்பட்டால் சமயத்தில் பெரிய பிரச்னையில் போய் முடியும். எப்போதும் பொது இடத்திலேயே உங்கள் காதலன் / காதலியை சந்திப்பது நல்ல ஐடியா.
காதலனின் / காதலியின் பெற்றோரைத் தெரிந்துகொள்!
காதலை வலுப்படுத்துவதற்கும் அதை நீடிக்கச் செய்வதற்கும் இது முக்கியம்! உங்கள் காதலி அல்லது காதலனிடம் அவர்களது பெற்றோரை அறிமுகப்படுத்தும்படி வற்புறுத்துங்கள். சில சமயம் இது சிக்கலில் மாட்டிவிடும்தான். ஆனால் சிக்கலை உண்டாக்காத பெற்றோர்களை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். எந்த சிக்கல் வந்தாலும் சமாளிக்கப் பாருங்கள். பயத்தில் சந்திப்பைத் தள்ளிப் போடாதீர்கள்.
காதலனின் / காதலியின் நண்பர்களை நட்பு கொள்!
உங்கள் காதலுக்குப் பிரச்னை என்று ஒன்று வந்தால் அப்போது நண்பர்களைப் போல் யாரும் உதவ மாட்டார்கள். உங்களுக்குள் சண்டை வந்தாலும் அவர்கள் சமாதானப் புறாக்களாக இருப்பார்கள். முக்கியமான ஒரு விஷயம். உங்கள் காதலிக்கு ஆண் நண்பர்கள் இருந்தால் பொறாமைப்படாதீர்கள். உங்கள் காதலனுக்கு நண்பிகள் இருந்தால் வயிற்றெரிச்சல் படாதீர்கள்! நம்பிக்கை காதலின் அஸ்திவாரம். பொறாமையால் நீங்கள் பல விஷயங்களை இழந்துவிடுவீர்கள்.
அன்பளிப்புகள் தரும் சந்தர்ப்பங்கள் கிடைத்தால் தவற விடாதே!
காதலர் தினம், பொங்கல், தீபாவளி, தமிழ்ப் புத்தாண்டு தினம், ஆங்கிலப் புத்தாண்டு தினம், கிறிஸ்தவராக இருந்தால் கிறிஸ்துமஸ், முஸ்லீமாக இருந்தால் ரம்ஜான், பக்ரீத் என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் காதலனுக்கு / காதலிக்கு குறைந்த செலவில் சின்னச் சின்ன அன்பளிப்புகள் வாங்கிக் கொடுங்கள். உங்கள் பிறந்த நாளுக்குக் கூட உங்கள் ஆளுக்கு அன்பளிப்பு தரலாம்!
காதலனாக இருந்தால் டை, சட்டை, புத்தகம், பேனா, டயரி, ஷேவிங் செட், அவருக்குப் பிடித்த படம் தியேட்டரில் ஓடினால் அதற்கு இரண்டு டிக்கெட், இப்படி ஏதாவது வாங்கித் தரலாம்.
காதலி என்றால் மலிவு விலையில் கம்மல்/தோடு, வளையல், சுரிதார், சல்வார் கமீஸ், புத்தகம், பேனா, கையடக்கக் கண்ணாடி, மேக்கப் சாதனங்கள், சினிமா டிக்கெட் வாங்கித் தரலாம்.
விட்டுக் கொடு, தியாகம் செய்யாதே!
“ஒரு லட்சியத்திற்காக சாவதை விட அந்த லட்சியத்திற்காக வாழ்வது மேல்” என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறீர்களா? அது போலத்தான் இதுவும். காதல் உங்களை உயர்த்தவேண்டுமே தவிர நடுத்தெருவில் பைத்தியமாக அலையவிடக் கூடாது. காதலுக்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள். ஆனால் நிறைய விஷயங்களை விட்டுக் கொடுங்கள்.
காதலனுக்கு / காதலிக்கு உங்களிடம் இருக்கும் சில குணங்கள் பிடிக்கவில்லையா?
அவசியம் மாற்றிக் கொள்ளுங்கள். சின்னச் சின்ன விஷயங்களில் உங்கள் சௌகரியங்களைத் தியாகம் செய்யலாம். ஆனால் வேலையை விடுவது, நண்பர்களைப் பகைத்துக் கொள்வது - இதெல்லாம் உங்களுக்கும் உங்கள் காதலுக்கும் நல்லதில்லை
காந்தி தனது அரசியல் போராட்டங்களையும் அறப் போராட்டங்களாக, ஆன்மிகப் போராட்டங்களாகப் பார்த்தார். இதுதான் அவரது அடுத்த கட்ட சீடர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. நேரு ஒரு நாத்திகர். படேலோ, ராஜாஜியோ, பிரசாதோ, ஆசாதோ காந்தியின் ஆன்மிக நோக்கங்களை முழுவதுமாகப் புரிந்துகொண்டவர்கள் அல்லர்.
காந்தியின் ஆன்மிகம் இன்னதுதான் என்று விளக்கிச் சொல்லும் திறன் எனக்கு இப்போது இல்லை.
அவர் ஒரு நாத்திகராக ஆரம்பித்தார் என்று புரிகிறது. ஆனால் அவர் இங்கிலாந்து சென்றபோது கிறித்துவ மதத்துக்கு அவரை மாற்ற பலர் அப்போது முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவிலும் பலர் அவரை கிறித்துவ மதத்துக்கு மாற்ற முயன்றுள்ளனர். ஆனால் தன் மதமே தனக்குச் சரியாகப் புரியாத கட்டத்தில் என் மதம் மாறவேண்டும் என்று காந்தி மறுத்துவிட்டு, தன் மத நூல்களை ஆழ்ந்து கற்க விரும்பியுள்ளார். பகவத் கீதை, பைபிள், குர்-ஆன் ஆகியவற்றை அவர் அப்போதுதான் படித்துள்ளார். பின்னர் காந்தி கீதையால் பெரிதும் கவரப்பட்டார். ஆனால் கீதையின் பாரம்பரிய உரைகளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. தானாகவே கீதைக்கு ஓர் உரை எழுதினார்.
உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக ஒருவர் வைத்துக்கொண்டால் அதனால் ஆன்ம பலம் பெருகும் என்றும் அந்த ஆன்ம பலத்தின் துணையைக் கொண்டு உலகையே மாற்றலாம் என்றும் காந்தி தீவிரமாக நம்பினார்.
உடலைத் தூய்மையாக வைத்திருப்பது என்றால் குடலைத் தூய்மையாக வைத்திருப்பது. உணவுப் பழக்க வழக்கங்களில் காந்தி நிறைய மாற்றங்கள் செய்துபார்த்தார். எளிதாக மலம் கழிக்க ஏதுவான உணவுகளாக பல சோதனைகளைச் செய்திருக்கிறார். அதேபோல் குடலைத் தூய்மையாக வைத்திருக்க அவ்வப்போது உப்பு நீர் எனிமா கொடுத்துக்கொள்வது அவரது வழக்கம். அத்துடன் தனக்குப் பிடித்தமானவர்களுக்கு எனிமா கொடுப்பது காந்தியின் பழக்கம் என்று லூயி ஃபிஷர் எழுதுகிறார். காந்தியிடம் எனிமா பெறுவது என்றால் அவரிடம் தீட்சை வாங்குவதற்கு சமம்.
குடல் தூய்மை போல, மன மலத்தைத் துடைப்பதும் காந்திக்குப் பெரும் சவாலாக இருந்திருக்கிறது. காந்தியைப் பொருத்தமட்டில் அவர் எளிதாக பொய் பேசுவதை வென்றுவிட்டார். காசு, பணம், நகை மீதான ஆசைகளையும் அவர் எளிதாக வென்றுவிட்டார். தன் சொத்து அத்தனையும் தன் பிள்ளைகளுக்கோ மனைவிக்கோ கிடையாது என்று ஆசிரமத்துக்கு எழுதிவைக்கும் மனோபாவம் அவருக்கு இருந்தது. கஸ்தூர்பாவுடன் பண விஷயத்தில் பலமுறை சண்டை வந்திருக்கிறது. தனக்குக் கிடைத்த பரிசுகளையும் தன் குடும்பம் பயன்படுத்தக்கூடாது என்பதில் காந்தி உறுதியாக இருந்தார். சொத்தின் மீது ஆசையில்லை. பொய் சொல்வதில்லை. பிறர் கெடவேண்டும் என்று நினைப்பதில்லை. அப்படியானால் இவரிடம் வேறென்ன கெட்ட பழக்கங்கள் இருக்கக்கூடும்?
செக்ஸ் ஆசை. பெண்ணின் உடல்மீதான ஆசை.
தன் மனைவியுடன் உறவு கொண்டிருக்கும் நேரத்தில் தனது தந்தை உயிர் பிரிந்தது காந்தியின் மனத்தை வாட்டிக்கொண்டே இருந்தது. ஆனால் அப்போது காந்தி மகாத்மா ஆகியிருக்கவில்லை. சாதாரணர்தான். பின்னர் காந்தி பாரிஸ்டர் படிப்புக்கு இங்கிலாந்து சென்றபோது அங்குள்ள ஆங்கிலேயப் பெண்களிடம் பழகும் வாய்ப்பு அவருக்கு இருந்தது. யாரிடமும் தான் ஏற்கெனவே மணமானவன் என்ற விஷயத்தை அவர் சொல்லவில்லை. ஓரிரு முறை சில பெண்களிடம் நெருக்கமாக இருந்திருக்கும் வேளையில் அதிலிருந்து “தப்பித்து” விட்டதாக எழுதியிருக்கிறார். மேலும் அவர் தனது தாய்க்கு சத்தியம் செய்து கொடுத்திருந்தார். பிற பெண்களைப் பார்க்கமாட்டேன் என்று.
காந்திக்கு இங்கிலாந்து செல்லும் முன் ஒரு குழந்தை. இந்தியா திரும்பியபின் ஒரு குழந்தை. தென்னாப்பிரிக்கா சென்று இரு குழந்தைகள் பிறந்தன. அந்தக் காலகட்டத்தில்தான் காந்தி பிரம்மச்சர்யம் - உடலுறவு இல்லாத நிலை என்பதை நோக்கிச் சென்றுள்ளார். பொதுவாகவே இந்திய முறையில் பிரம்மச்சர்யம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்று நான்கு அடுக்குகள் உள்ளன. காந்தி இருந்த நிலை வானப்பிரஸ்தம் என்றுதான் சொல்லவேண்டும்.
காந்திக்கு செயல் வேறு, மனம் வேறு என்றில்லை. செயலால் அவர் பாலுணர்ச்சி இல்லாதவராக இருந்தாலும் அவரது மனம் அலைபாய்ந்துள்ளது. பல பெண்கள் அவரால் கவரப்பட்டனர். அவரும் சில பெண்களால் கவரப்பட்டிருக்கலாம். ஆனால் தென்னாப்பிரிக்காவில் அவர் இருந்த காலகட்டத்தில் போராட்டமே குறியாக இருந்ததால் அவர் மனம் வேறு பக்கம் சாயவில்லை.
இந்தியா வந்தபின் காந்திக்கு மெடலைன் ஸ்லேட் என்ற பெண் (மீரா என்று தன் பெயரை மாற்றிக்கொண்டவர்) சீடராக வாய்த்தார். ஸ்லேடுடனான உறவு மிகவும் சிக்கலானது. காந்தியின் ஆஸ்ரமத்தில் பல பெண்கள் தங்கியிருந்தனர். நான்கு குழந்தைகள் பெற்ற, 50 வயதுக்கும் மேலான காந்தி உடலுறவற்ற நிலையை மணமான, மணமாகாத இளம் பெண்களிடமும் பரப்பியவண்ணம் இருந்தார். அப்படிப்பட்ட ஒரு சத்தியப் பிரமாணத்தைத்தான் ஜெயபிரகாஷ் நாராயணின் மனைவி பிரபாவதியும் எடுத்துக்கொண்டார். மேலும் பலரையும் காந்தி நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக வற்புறுத்தினார்.
இதற்கிடையில் காந்தி வங்காளத்தைச் சேர்ந்த தாகூரின் உறவுக்காரப் பெண்ணான சரளாதேவி சவுதராணி என்ற பெண்மீது மையல் கொண்டார். இந்தப் பெண், பஞ்சாபைச் சேர்ந்த ராம்புஜ் சவுதுரி என்பவரைத் திருமணம் செய்துகொண்டிருந்தார். ரவுலட் சட்டத்தை எதிர்த்து, ஜாலியன் வாலா பாக் படுகொலைகளை எதிர்த்துப் போராடிய பலர் சிறையில் அடைக்கப்பட்டபோது ராம்புஜ்ஜும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
காந்தி பஞ்சாப் சென்றபோது சரளாதேவியின் வீட்டில் தங்கினார். அங்கு அவர் இருந்த காலத்தில் சரளாதேவியுடனான உறவு நெருக்கமானது. சரளாதேவியைத் திருமணம் செய்வது என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் அந்தத் திருமணம் “உடல் அள்விலானதல்ல, தூய்மையான மன அளவிலானது” என்பது காந்தியின் கருத்து. ஆனால் ராஜாஜி, காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி முதற்கொண்டு பலரும் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். இதனால் சுதந்தரப் போராட்டத்துக்குப் பின்னடைவு ஏற்படும் என்பது இவர்களது கருத்து.
[காந்தி சரளாதேவியுடனான “spritual marriage” பற்றிப் பேசும் காலகட்டத்தில் ராம்புஜ் சிறையிலிருந்து வெளியே வந்து இறந்தும் போயிருந்தார். சரளாதேவி, ராம்புஜ் தம்பதிகளுக்கு ஒரு வளர்ந்த மகன் இருந்தான்.]
இந்தக் காலகட்டத்தில் கஸ்தூர்பா என்ன நினைத்தார் என்பது பற்றிய தகவல்கள் இல்லை. கடைசியாக காந்தி, சரளாதேவியை மணக்க இயலாது என்று கடிதம் எழுதினார். அன்றிலிருந்து சரளாதேவி காந்தியை எதிர்க்க, வெறுக்க ஆரம்பித்தார். காந்தி அதற்குப்பின் சரளாதேவி பற்றி எங்குமே எழுதவில்லை.
காந்தி உண்ணாவிரதத்தை ஓர் ஆயுதமாக ஆக்கியது இதற்குப் பிறகுதான். உண்ணாவிரதத்தை தன் உடலைத் தூய்மை செய்யும் ஒரு கருவியாகவே காந்தி பார்த்தார். ஆனால் மனத்தைத் தூய்மை செய்யும் கருவி என்னவாக இருக்கும் என்று அவர் தேடியுள்ளார்.
தந்த்ரா முறையில் வழிபடுபவர்களுக்கு “கருவி” ஒன்று தேவை. அந்தக் கருவி, ஓர் இளம் கன்னிப் பெண். அந்தக் கன்னிப் பெண்ணின் மூலமாக மனத்தை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்வது. அதன் ஒரு நோக்கம் முற்றிலும் ஆடையில்லாத ஓர் இளம்பெண்ணைப் பார்க்கும்போதும் ஒருவர் மனத்தில் எந்தவித கிளர்ச்சியும் வராதிருப்பது.
காந்தி உடல் அளவில் பிற பெண்களுடனும் தன் மனைவியுடனும் உறவு கொள்ளாவிட்டாலும், மனத்தளவில் தனக்கு அந்தக் கட்டுப்பாடு இருக்கிறதா என்று சோதிக்க விரும்பினார். அதனால் ஆஸ்ரமத்தில் தன்னைச் சுற்றி பல பெண்களை வைத்திருந்தார். அவர்களுடன் நிறையப் பேசினார். பழகினார். அவர்களைத் தனது சகோதரிகள் என்றும் தான் அவர்களுக்குத் தாய்போல என்றும் சொன்னார்.
“மோகன்தாஸ்” புத்தகத்தில் ராஜ்மோகன் காந்தி, மோகன்தாஸ் காந்திக்கு ஒருவித நரம்பு நோய் இருந்தது என்று குறிப்பிடுகிறார். மிகவும் அழுத்தம் அதிகமான கட்டங்களில் காந்தியின் உடல் தாங்கமுடியாமல் நடுங்க ஆரம்பிக்கும். அப்போது அவர் யாரையாவது அணைத்தவாறு படுத்திருப்பார். இவ்வாறு அவர் அணைத்துக்கொண்டு படுத்தது ஆஸ்ரமத்தில் இருந்த பெண்களில் ஒரு சிலரை. ஆனால் இது வெளிப்படையாக அனைவரும் பார்க்கும் வண்ணம் இருக்கும். கஸ்தூர்பாவும் அதே ஆஸ்ரமத்தில்தான் அப்போது இருந்தார். (“I am taking service from the girls” என்றுதான் காந்தி பலமுறை இதைப்பற்றி கடிதங்களில் குறிப்பிடுகிறார். இவை குஜராத்தி கடிதங்கள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவையா அல்லது ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டவையா என்று நான் ஆராயவில்லை.)
ஆனால் இந்தப் பழக்கத்தை அவரது ஆண் சீடர்களும் தொண்டர்களும் கடுமையாக எதிர்த்தனர். காந்தி அதைப்பற்றி அவ்வளவாகக் கவலைப்படவில்லை. ஆனால் ஓரிருமுறை காந்திக்கு “இரவு வெளிப்பாடு” (nocturnal emission என்று காந்தி இதனைக் குறிப்பிடுகிறார். விந்து வெளியேறுதல்) ஏற்பட்டது. 60 வயதைத் தாண்டியிருந்த காந்தியை இது கடுமையாக பாதித்தது. தனது மனம் தூய்மையாக இல்லையோ என்று காந்தி சந்தேகித்தார். அதனால் பெண்களிடமிருந்து பெறும் “சேவையை” காந்தி நிறுத்திவைத்தார். அவ்வப்போது சேவையைப் பெறுவதும் நிறுத்துவதுமாக இருந்தார். அவரது மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்திருந்தது.
ஆனால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதுபோல், காந்தி அடுத்தகட்டப் பரிசோதனைக்குச் சென்றார். தனது பேத்தியான 18 வயது மனுவுடன் ஆடையின்றி சேர்ந்து படுத்துக்கொண்டு தனது ‘மனத் தூய்மையை' நிலை நாட்டப் பார்த்தார். மனுவிடம் காந்தி தொடர்ச்சியாக பிரம்மச்சரியத்தைப் பற்றிப் பேசிவந்திருக்கிறார். கடிதத்தில் எழுதியபடி இருந்திருக்கிறார். இந்த சோதனை காந்தி நவகாளியில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகப் போராடும் கட்டத்தில், காந்தியின் 77வது வயதில், நடந்தது.
தனது மனம் பாலுணர்ச்சியின்றித் தூய்மையாக இருந்தால் தன்னால் இந்து-முஸ்லிம் ஒற்றுமையைக் கொண்டுவரமுடியும் என்று காந்தி நம்பினார் என்றே தோன்றுகிறது.
சுற்றிலும் வன்முறை நடக்கும்போது தன்னைத்தான் காந்தி நொந்துகொண்டார்.
***
இன்று காந்தியைப் பற்றிப் படிக்கும்போது இந்த விஷயங்கள் மிகவும் நெருடுகின்றன. அன்றே நேரு முதல் பிற அனைவருக்கும் இது நெருடலாகவே இருந்தது. “கருவி”களாகப் பயன்பட்ட பெண்களின் நிலையைப் பற்றி காந்தி நினைத்துப் பார்த்தாரா என்பது தெளிவாக விளங்கவில்லை.
காந்தி தன்னைச் சுற்றி இருந்த பெண்களின் வாழ்க்கையில் நிறையவே குறுக்கிட்டார். ஒரு கட்டத்தில் மெடலைன் ஸ்லேட் காந்தியிடம் சண்டை போட்டுக்கொண்டுதான் வெளியேறிப் போனார். அதிலும் ஸ்லேடின் மண ஆசை குறுக்கிட்டது. ஸ்லேட், பிருத்விராஜ் சிங் என்ற இந்திய தேசியப் படையில் சிப்பாயாக இருந்து அஹிம்சை வழிக்கு மாறிய ஒருவரை மணம் செய்ய விரும்பினார். காந்தி இதனை ஏற்கவில்லை. பின்னர் பிருத்விராஜும் தனக்கு ஸ்லேட்மீது காதல் இல்லை என்று சொல்லிவிட்டார்.
காந்தி, ஒரு பக்கம் தன் பேத்தி மனு பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று விரும்பினார். அதே நேரம் காந்தி, தன் உதவியாளர் பியாரேலாலும் மனுவும் மணந்துகொள்ளவேண்டும் என்றும் விரும்பினார். கடைசியில் இந்தத் திருமணமும் நடக்கவில்லை.
***
காந்தி, அவராகவே சில ஆன்மிக முறைகளை வகுத்துக்கொண்டு அதன்படி நடக்க முற்பட்டார். அரசியல் இல்லாவிட்டால், அவரே ஒரு குருவாகி, இந்துமதத்தின் ஒரு புதுப் பிரிவைத் தோற்றுவித்திருக்கலாம். அல்லது முற்றிலும் புதிய மதம் ஒன்றை அவர் தோற்றுவித்திருக்கலாம்.
பார்த்தவுடன் காதல் பற்றிக் கொண்டதாக பலரும் கூறுகிறார்கள். இப்படி முதல்பார்வையிலேயே காதல் வந்துவிடுமா? அப்படி வந்தால் அது காதல்தானா?
ஒருவரது தோற்றம்தான் நம்மை முதலில் ஈர்க்கும். ஏனெனில் நமது பார்வைக்கு முதலில் தோன்றுவது அவரது உருவம்தான். அவரது அழகு, நடை, உடை, பாவனைகள் இவற்றைத்தான் நாம் முதலில் பார்க்கிறோம். அது பிடித்திருந்தால் பார்த்த மாத்திரத்திலேயே அவர் நம்மை ஈர்த்து விடுவார்.
அப்படி பிடித்து போய்விட்டால் உங்கள் பார்வை அவரைத் துரத்துவதுபோல ஆர்வத்தோடு பார்க்கும். குளுமை வீசி கவர்ந்திழுக்க முயற்சிக்கும். இந்த பார்வையை எதிர்கொள்ளும் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் உங்களை பற்றிய ஒரு அபிப்பிராயம் எழுவதும் இயல்பே. அதை அவர் எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான் உங்களது காதல் அரும்புவதும், கருகுவதும் இருக்கிறது.
பார்வையில் பலவிதம் இருக்கிறது. நீங்கள் பார்க்கும் பார்வைக்கும், அவர் பார்க்கும் பார்வைக்கும் பொருள் என்ன என்பதை புரிந்து கொள்வதில் தான் காதலின் வெற்றி இருக்கிறது. ஒருவரை மீண்டும் மீண்டும் ஆவலோடு பார்க்கிறோம் என்றால் அது காதல், காமம், அன்பு எதுவாகவும் இருக்கலாம்.
முதல் பார்வையில் உங்களுக்குள் ஆர்வம் வந்துவிட்டாலும் அது காதலா, இல்லையா என்பதை அறிய சில காலம் பிடிக்கும். காதலில் நேரத்தை பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. தொடர்ந்து காட்டும் நேச பார்வையும், அன்பு புன்னகையும், கனிவான நடவடிக்கைகளும் நீங்கள் விரும்புபவருக்கு உங்கள் மீது காதலை மலரச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.
இப்படி பார்வையில் பல நாட்கள் கடந்தாலும் சிலருக்கு `காதல் இதுதானா? நாம் காதலில் விழுந்துவிட்டோமா’ என்பது தெரிவதில்லை. அதைக் கண்டுபிடிக்கவும் வழி உண்டு.
உங்கள் நடவடிக்கையில் முன்பைவிட மாற்றம் ஏற்பட்டிருப்பதாக உணர முடிகிறதா? ஒரு செயலைச் செய்யும்போது அம்மா, அப்பா உள்பட அருகில் இருப்பவர்கள் தலையில் தட்டி `உனக்கு என்ன ஆச்சு, ஒழுங்கா வேலைய பாரு’ என்று சொல்லித் தெரியவேண்டிய அளவில் உங்கள் கவனம் சிதறுகிறதா? அப்படியானால் அந்த நேரத்தில் உங்கள் சிந்தனையை யார் ஆக்கிரமித்திருக்கிறாரோ அவர் மீது உங்களுக்கு விருப்பம் வந்துவிட்டது என்று பொருள். அவரது பார்வைதான் உங்களுக்குள் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதும் உண்மை.
காதல் தவறென்றும், அதை ஒரு பலவீனமான எண்ணமாக கருதுபவர்களும் உண்டு. அவர்கள் பெற்றோரின் தீவிர கண்காணிப்பில் வளர்ந்தவர் களாகவும், பாச உணர்ச்சி அதிகம் கொண்டவர் களாகவும் இருப்பார்கள்.
“மிகுந்த பாசம் காட்டி வளர்க்கபடுபவர்களே எளிதில் காதலில் விழுவார்கள்” என்பார் உளவியலின் தந்தை பிராய்டு. இப்படிபட்டவர்கள் தான் முதல்பார்வையில் தங்களுக்குள் காதலை அரும்ப விட்டுவிட்டு, அப்பா கண்டிபாரோ, எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி இருக்குமோ, காதலிப்போமா, வேண்டாமா? என்று குழப்பிக் கொண்டிருபார்கள்.
இவர்களுக்கு தன்னை விரும்புபவர் பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தாலும், கண்டும் காணாமலும் இருக்க முயல்வார்கள். அவர் தன் அருகில் இருந்து நீங்கியதும் அவரைத் தேடி விழிகளை அலைபாய விடுவார்கள். தங்களுக்குள் தாமே `கண்ணாமூச்சி’ ஆடிக்கொள்வதுபோல் இருக்கும், இவர்களது நினைப்பும், நடத்தையும்…
எது, எப்படியோ முதல் பார்வையில் காதலில் விழுந்தவர்கள் ஏராளம். அது சரியா? தவறா? என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மற்றவர்களுக்கோ சரியென்றால் சரி, இல்லையென்றால் இல்லை.
பி.கு: இந்த தலைப்புக்கும் சிம்புவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ?!!