Tuesday, December 28, 2010

சச்சின் ஒரு சகாப்தம் - என் தேசம்! என் சச்சின்!!


சமர்பணம்: இன்று ”சொற்ப ரன்னில் அவுட் ஆகிய சச்சின்” என போடும் பத்திரிக்கைகளுக்கும், அவரை திட்டும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும்..!


தனது 16வது வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது டெஸ்ட் வாழ்க்கையை ஆரம்பித்த சச்சின் ரமேஷ் டெண்டுல்கள் டெஸ்ட் வரிசையில் டொன் பிராட்மனுக்கு இரண்டாவது. ஒரு தினப் போட்டியில் விவியன் ரிச்சர்டுக்கு இரண்டாவது. கிரிக்கட் பஞ்சாங்கமான 'விஸ்டன்' ஆருடம் கணித்தது. ஆனால் சாதனைகள் என்று வரும்போது அவர்தான் இன்று 'நம்பர் ஒன்' - இதைச் சொல்ல எந்த விஸ்டனும் தேவையில்லை.

இந்தியாவில் கிரிக்கட் மதம் என்றால் சச்சின் அதன் கடவுள் என பாரி ரிச்சர்டு சொன்னார். இப்போது 439 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ள பள்ளி மாணவன் சர்ப்ஃராஸ் கானும் அதைத்தான் சொல்கிறார்.

டெஸ்ட் போட்டிகளிலும், ஒரு தினப் போட்டிகளிலும் 17,000க்கு மேற்பட்ட ரன்கள். முதல்தர ஆட்டத்தில் ஏறக்குறைய சுமார் 25,000 ஓட்டங்கள்.

டெஸ்ட் போட்டிகளில் 50 சதங்கள், 59 அரைச் சதங்கள். ஒரு தினப் போட்டியில் 46 சதங்கள். சுமார் 96 அரைச் சதங்கள். அதிக பட்ச ஸ்கோர் டெஸ்டில் ஆட்டமிழக்காது 248. ஒரு தினப் போட்டியில் ஆட்டமிழக்காது 200. அதிகமான ஆட்ட மற்றும் தொடர் நாயகன் விருதுகள்.

டெஸ்டில் அதிக சதங்கள் என்று வந்த போது கவாஸ்கர். டெஸ்டில் அதிக ரன்கள் என்று வந்த போது பிராயன் லாரா. அதிக அரைச் சதங்கள் என்று வந்த போது அலன் பார்டர் ஆகியோரது சாதனைகள் தகர்ந்தன. அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் பத்துச் சதங்கள் என்பது எழுபது ஆண்டுகள் நிலை நின்றிருந்த Jack Hobbs ஐயையே முறியடித்த சாதனை.

பொது வாழ்க்கையில் பத்மசிறி, பத்மவிபூஷன், விளையாட்டில் உயர்வகை விருதான அர்ஜூனா, ராஜிவ் காந்தி கேல் ரத்தின இவர் கையடக்கியவை. இனி 'பாரத ரத்னா' தான் பாக்கி. அது விரைவில் வீடு வந்து சேரும் என்பது அவரது
ரசிகர்களின் நம்பிக்கை. 'விஸ்டன்' ஓராண்டு இவரை அந்த ஆண்டில் சிறந்த கிரிக்கட் வீரர் என அறிவித்தது.

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுண் ஒருபடி மேலே போய், சம்பிரதாயங்களைப் பற்றிக் கவலைப்படாது பிரித்தானியாவின் உயர் விருதான 'சேர்' பட்டம் வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைத்தார். அமெரிக்க 'டைம்' சஞ்சிகை, 'அவர் தேர்ந்தெடுத்த துறையில் இன்று உயிர் வாழும் மிக உன்னதமான பிறவி' என வர்ணித்தது.

'லிட்டில் மாஸ்டர், லிட்டில் சம்பியன், மாஸ்டர் ப்ளாஸ்டர், டெண்டியா என்பவை இவரது நண்பர்களும், அபிமானிகளும் இவருக்கு வைத்துள்ள செல்லப் பெயர்கள்.
மராத்திய எழுத்தாளர் ரமேஷ் டெண்டுல்கர் தன் செல்லப் பிள்ளைக்கு சூட்டிய பெயர் தன் அபிமானத்துக்குரிய இசைக் கலைஞரான சச்சிவ் தேவ் பர்மனுடைய பெயர்.
வேகப் பந்து வீச்சில் பயிற்சி பெற டென்னிஸ் வில்லியை இவர் அணுக, 'தம்பி

இதற்கு நீ சரிவர மாட்டாய் - வேறு வேலை இருந்தால் பார்' என்று திருப்பி அனுப்பிவிட்டார். ஆனால் இவருடைய துரோணாச்சாரியார் ராம்காந்த் அச்ரேகர் இவர் உள்ளில் உறையும் அர்ஜூனனை அடையாளம் கண்டு கொண்டார்.

1988ஆம் ஆண்டில் இவர் தனது பள்ளிக்காக ஆடிய எல்லாப் போட்டிகளிலும் சதம் பெற்றதோடு, வினோத் கம்பளியுடன் இணைந்து 664 ரன்கள் என்ற சாதனையைப் படைத்தார். அதில் சச்சினின் பங்கு மாத்திரம் 326 ரன்கள். 2006ஆம் ஆண்டுவரை ஹைதராபாத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் முறியடிக்கும் வரை அது உலக சாதனையாக இருந்தது.

இவரது 14வது வயதில் கவாஸ்கர் தனது மெல்லிய கால் காப்புக்களை இவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அது நடந்து இருபது ஆண்டுகள் கழித்து அதே கவாஸ்கருடைய 34 சதங்கள் என்ற சாதனையை முறியடித்தார். 

15வது வயதில் குஜராத்துக்கு எதிராக மும்பைக்காக ஆடிய கன்னி ஆட்டத்தில் சதமடித்தார். அதன் மூலம் முதல் தர ஆட்டத்தில் இத்தகைய சாதனை புரிந்த இளைய ஆட்டக்காரர் என்ற பெருமையைப் பெற்றார். ரஞ்சி, தியோதர், துலிப் மற்றும் ஈரானி ஆகிய அத்தனை விருதுகள் போட்டியிலும் சதம் பெற்றவர் சச்சின். இந்த விடயத்தில் வேறு யாரும் இவரருகில் கூட வரமுடியாது.

1998இல் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக மும்பையில் ஆடிய போது பிரேபோன் மைதானத்தில் இவர் பெற்ற இரட்டைச் சதம் எல்லோரையும் நிமிர்ந்து பார்க்க வைத்தது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக அது எளிதான காரியம் அல்ல.

இங்கிலாந்தில் யோர்க்ஷயர் அணி வெளிநாட்டவர் எவரையும் தங்களுடன் சேர்த்துக் கொள்வதில்லை. அப்படிச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஒரே நபர் சச்சின் தான். அந்த சீசனில் அவர் 16 போட்டிகளில் 1070 ரன்கள் எடுத்தார். சராசரி 46.52

1989இல் தனது 15வது வயதில் கராச்சியில் பாக்கிஸ்தானுக்கு எதிராக டெஸ்டில் பிரவேசம். இந்த டெஸ்டில்தான் வேகப் பந்து வீச்சாளர் வக்கார் யூனுசும் தனது டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு போட்டியில் அப்துல் காதருக்கு எதிராக ஓர் ஓவரில் சச்சின் 28 ரன்கள் எடுத்ததை மறக்க முடியாது என்கிறார் கிருஷ்ணமாச்சாரி சிறிகாந்த்.

1990இல் இங்கிலாந்தில் தான் இவரது கன்னிச் சதம் வந்தது. 91 - 92இல் சச்சினின் ஆட்டத்தைப் பார்த்த மெர்வ் ஹியூஸ் அலன் பார்டரிடம் 'பார், இந்தப் பொடியன் உன் சாதனையை முறியடிக்கப் போகிறான்' என்றார். அது நடந்தது.

கிரிக்கெட்டில் அவர் சாதனை படைக்க முடியாமல் போனது ஒரே ஒரு விடயத்தில்தான். இரண்டு முறை கப்டனாக இருந்தும் அந்தப் பதவியில் அவர் சோபிக்கவில்லை.

வாழ்நாளில் ஒரே ஒரு முறை தான் சச்சின் போன்ற ஆட்டக்காரரைச் சந்திக்க முடியும் என்றார் வாசிம் அக்ரம். 99.9 வீதம் பரிபூரண ஆட்டக்காரர் சச்சின் என்றார் விவியன் ரிச்சர்ட். சச்சினை ஒரு ஜீனியஸ் என்றார் சேர் ரிச்சர்ட் ஹாட்லீ. இப்படி பல்வேறு சொற் தொடர்களால் அலன் பார்டர், பிரையன் லாரா ஆகியோர் புகழ்ந்திருக்கிறார்கள்.


சச்சினை மகிமைப்படுத்தும் இன்னொரு விடயம் சச்சினின் சாதனையை முறியடிக்கக் கூடியவர்கள் என்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை எவரும் இல்லை.

சச்சினுக்குப் பிறகு அதிக ரன்களைப் பெற்றுள்ள சனத் ஜயசூரிய 4,000 ரன்கள் பின்னால் நிற்கிறார். அவரது ஆட்ட நாட்கள் ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டன. சதங்களில் அவரைத் தொடக்கூடியவர் எனக் நம்பப்பட்ட ரிக்கி போண்டிங்கும் அப்படியே. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளைப் பெற்ற சாதனையிலும் அவரை மிஞ்ச எவரும் இருப்பது போல் தோன்றவில்லை.

விளம்பர வருவாயில் மாத்திரம் ஒருவர் அவரை மிஞ்சியிருக்கிறார். அவர் தோனி. மற்றும்படி வேறு எந்தச் சாதனையிலும் சச்சினை மிஞ்ச எந்தக் கொம்பனும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

அவருடைய சமூகப் பிரஞ்சைக்கும், மனித நேயத்துக்கும் ஒரு சான்று. அவரது மாமியார் நடத்தி வரும் 'அப்னாலயா' மூலம் அவர் 200 குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றார்.

சென்னையில் ஓர் ஆட்டத்தில் அவர் சதம் பெற்றார். ஆனால் இந்தியா தோற்றுப் போய்விட்டது. சச்சின் தலைகுனிந்த வண்ணம் பஸ் ஏறப் போகிறார். அவரது சகா அவரை ஆதரவாக அணைத்தபடி வழி நடத்தி வருகிறார். உற்றுப் பார்த்த போது சச்சினின் கண்களில் கண்ணீர்.

இந்த ஆட்டத்துக்கு முதல் ஆட்டத்திலும் 175 ரன்கள். 17,000 ரன்கள் என்ற மந்திர இலக்கைக் கடந்த அற்புத சாதனை. ஆட்ட நாயகன் என்ற விருது. என்றாலும் சச்சினின் கண்களில் நீர்க்கோப்பு. தொண்டை கம்மி இருந்தது.

தனக்கு இத்தனை புகழ் வந்தென்ன - இந்தியா தோற்றுப் போய்விட்டதே என்கிற சோகம்.

இந்த சோகத்தால் அவரது தலை குனிந்தது. ஆனால் அவரது அப்பழுக்கற்ற தேச் பக்தியை எண்ணி, அவரது சாதனைகளை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் பெருமையுடன் தலை நிமிர்ந்தான்

என் தேசம்! என் சச்சின்!!


Saturday, December 11, 2010

லவ் பண்ணுவது எப்படி?

பசங்களுக்கு...

முதல்ல. ஒரு பொண்ண கண்டுபிடிக்கனும். எப்படி? 

அந்த பொண்ணுக்கு எந்த qualification இருக்கோ இல்லையோ.. இரண்டு qualifications முக்கியம். 

  • முதல்ல, அவ வேற யாரையும் காதலிக்க கூடாது. 
  • இரண்டாவது என்னனு கடைசில சொல்லறேன். 

சரி. அப்படி ஒரு பொண்ண கண்டுபிடிச்சுடீங்களா. இப்ப, அந்த பொண்ணு உங்க ரேஞ்சில இருக்கனும். அதாவது, கண்ணாடி முன்னாடி போனா, நீங்க எப்படினு உங்களுக்கு தெரியும். அழகு, smartness, attitude, humor sense இதெல்லாம் வைச்சு, (நம்ம பொண்ணுங்களுக்கு மார்க் போடுவோமே) நமக்குனு ஒரு மார்க் இருக்கும். அந்த ரேஞ்சுக்கு கொஞ்சம் முன்ன பின்ன பொண்ணு இருக்கலாம். ரொம்ப கம்மியாகவோ, ரொம்ப கூடவோ இருந்தா, பொண்ணுக்கு நம்மை பிடிக்காம ரிஜக்ட் செய்ய வாய்ப்புகள் அதிகம். (ஆனா, உண்மை காதலுக்க்கு, எப்படி இருந்தாலும் சரி ). So, இப்போ, பொண்ண செலக்ட் செய்தாச்சு! 

இரெண்டாவது, அந்த பொண்ணு மேல காதல் வரணும். 


இதெல்லாம் எப்படினு சொல்ல முடியுமா! காதல் வரலனா ஒன்னும் செய்ய முடியாது...சரி சரி.. அழாதீங்க. தபூஷங்கர் கவிதைகள் படிங்க. கண்டிப்பா காதல் மேல ஒரு ஆசை வரும். அப்படியும் வரலனா, நிறைய தமிழ் சினிமா பாருங்க.. காதலுக்கு மரியாதை, சேது, இப்படி ... தானா வரும். 

மூன்றாவது, அந்த பொண்ணு கிட்ட காதலை சொல்லனும். 


நீங்க நண்பனா பழகுவீங்களோ, இல்ல வழியறீங்களோ, ஆனா சொன்னா தான் காதல். காதல் சொல்லவே தைரியம் இல்லனா, ரொம்ப கஷ்டம். லவ் லெட்டர் எல்லாம் so old fashion. பொண்ண நேர்ல பார்க்க முடிஞ்சா, அவ கண்ண பார்த்து (Note this point, காதலிக்கிற பொண்ண கண்ணுல மட்டும் தான் பார்த்து பேசனும்.. unless நீங்க கருப்பு கண்ணாடி போட்டு இருந்தா) "நான் உன்னை காதலிக்கின்றேன்" அப்படினு நச்சுனு சொல்லனும். அப்போ தான் பொண்ணுக்கும் ஒரு நம்பிக்கை வரும். சரி. கடைசி வரை வச்சு காப்பாத்துவான்னு! நேர்ல பார்க்க முடியலையா, ஒரு போன்ல சொல்லுங்க. ஆனா, பொண்ணு சுதாரிச்சு, அவ உண்மையான உணர்வை மறைப்பதற்க்குள், அதை கண்டுகொள்ளும் படியான ஒரு மீடியா அவசியம். 

நான்காவது, அந்த பொண்ணு, ரிஜக்ட் செய்தால் என்ன செய்ய. 


கண்டிப்பா, எந்த பொண்ணும், உங்களை காதலிச்சா கூட உடனே ஒத்துக்கொள்ள மாட்டா. அதுனால, கொஞ்சம் பொறுமை வேணும். (Again, note this point,. கொஞ்சம் தான் பொறுமை வேணும். லூசு மாதிரி, 5 வருஷமா பின்னால சுத்த கூடாது. காதல் ஒரு முறை தான் வரும். அதுவும் ஒருத்தர் மேல தன் வரும் அப்படினு சினிமா டயலாக் பேசனீங்கனா, சேது மாதிரி தான் கடைசில ஆகுவீங்க). ஒரு பொண்ணு மேல நீங்க உண்மையாகவே அக்கறையும், அன்பும் காட்டினா, கண்டிப்பா புரிஞ்சிப்பா. 

ஐந்தாவது, இது எதுவுமே ஒத்து வரலனா.. 

Please go to Step one.

சரி, கடைசியா பொண்னு செலக்ட் செய்ய, இரண்டாவ்து criteria சொல்லறேன்னு சொன்னேன் இல்ல..வ இந்த பதிவ படிச்சு இருக்க கூடாது! வேற என்ன ;)


பெண்களுக்கு...


பையன பார்த்து லேசா சிரிங்க. அதுக்கு மயங்கலனா, வேலைக்கு ஆகாது.!??


- இது ஒரு மீள்பதிவு

Wednesday, December 1, 2010

ஐ லவ் யூ சொல்ல ஐடியா.!


இந்த வார்த்தை படுத்தும் பாடுதான் என்ன? இதை சொல்லப் படும்பாடுதான் என்ன? அப்பப்பா….

இதோ ஐ லவ் யூ சொல்ல ஒரு சில ஆலோசனைகள்…. பயப்படாமல் செய்து பாருங்கள். வெற்றி நிச்சயம் கிட்டும்.

சொல்லும் காதல் தான் செல்லும். சொல்லாத காதல் செல்லாது. சொல்ல பயமாக இருக்கிறதா? அப்படியென்றால் இதில் எது உங்களுக்கு சரியெனத் தோன்றுகிறதோ அதை செய்யலாம்.

நீங்கள் விரும்பும் நபரை வெளியே அழைத்துச் சென்று, ஐ லவ் யூ என்று எழுதும்படி ஆர்டர் செய்து கேக் வாங்கிக் கொடுத்து அசத்துங்கள்.

ரேடியோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு போன் செய்து நீங்கள் காதலிப்பதை உணர்த்தலாமே?

உங்களது அல்லது உங்களுக்கு பிடித்தமானவரின் நண்பரிடம் பூ கொடுத்து அனுப்பலாம்.

உங்களது காதலை வாய்ஸ் மெயில் அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பலாம்.

அவரின் கையில் கிடைக்கும்படி காதல் கடிதம் கொடுக்கலாம்.

வாழ்த்து அட்டை அல்லது கடிதத்தை தபால் மூலம் அனுப்பலாம்.

அவருடன் எங்கேனும் செல்லும்போது, காற்றில் எழுதும் பேனாவின் மூலம் எழுதிக் காட்டலாம்.

அவர்களைப் பற்றி கவிதை எழுதிக் கொடுக்கலாம்.

உங்களுக்கென தனி இணையதள முகவரியை தயார் செய்து அதன் மூலம் அவருக்கு உங்களது காதலை சொல்லலாம்.

ரொம்ப வித்தியாசமாக இருக்க வேண்டுமானால் உள்ளூர் நாளிதழில் அவருக்கு மட்டுமே புரியும் வகையில் விளம்பரம் கொடுக்கலாம்.

அவரது கணினியில் காதல் சின்னத்தை ஸ்கிரீன் சேவராக சேவ் செய்து வைத்துவிடுங்கள்.

இனிப்பு அடங்கிய பெட்டியில் காதலை சொல்லும் வாழ்த்து அட்டையை கொரியரில் அனுப்புங்கள்.

அவரது புகைப்படத்தைக் கொடுத்து ஓவியமாக வரைந்து வாங்கி அதை அவருக்கு அனுப்புங்கள்.

நீங்கள் எப்போதும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் மரத்தில் இதயத்தை வரைந்து அதில் உங்களது பெயரை செதுக்கி வையுங்கள்.

அவருக்குத் தேவையான, முக்கியமானதொருப் பொருளை வாங்கி பரிசாக அளித்து அவர் மகிழ்ச்சியாக இருக்கும்போது உங்களது காதலை உரையுங்கள்.

காதல் பாடல்களை ஒன்றாக சி.டியில் தொகுத்து பரிசாக அளிக்கலாம்.

உங்கள் துணையின் கையில் சிக்கும்படி பூங்கொத்தை வைத்து அதில் ஐ லவ் யூ என்று உங்கள் கைப்பட எழுதி வையுங்கள்.

காதல் அட்டையை மின்னஞ்சலில் அனுப்பலாம்.

ஒரு பேப்பரை எடுத்து அதனை இதய வடிவில் வெட்டிக் கொள்ளுங்கள். அதில் “உனக்கு ஒன்று தெரியுமா? நீதான் எனது இதயத்தின் எஜமானி” என எழுதி அவரது கையில் கிடைக்கும்படி செய்யுங்கள்.

உங்கள் துணையை நீங்கள் காதலிப்பதற்கான 25 காரணங்களை எழுதி அவரிடம் அளிக்கலாம்.

உங்கள் துணையைப் பற்றிய பல்வேறு குறிப்புகளை அவருக்குத் தெரியாமல் அறிந்து கொண்டு அவரிடம் அதனை சொல்லி அசத்தலாம்.


வெற்றி நிச்சயம்….. வாழ்த்துக்கள்.

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்.!


காதல் இளமையில் அரும்பும் இனிய உணர்வு மட்டுமல்ல; அது உண்மையாக உள்ள போது முதுமையின் முடிவு வரை தங்கக்கூடிய ஓர் அழகான நிரந்தர பந்தம்.
கைகளைக் கோர்த்து நடப்பது காதல் அல்ல, மனங்களைக் கோர்த்து இணைவது காதல், ஆசைப்பார்வைகள் காதல் அல்ல, மோகம் வடிந்தும் பின்னிப்பிணைவது காதல்,  

ஆனால், இந்த வரையறைக்கேற்ற காதலை இன்று அதிகம் காண முடிவதில்லை. இனிய உணர்வாக ஆரம்பிக்கும் காதல் விரைவிலேயே கசப்பான அனுபவமாகி விடுகிறது.

காரணம் திரைப்படங்கள், காதல் கதைகள் எல்லாம் திருமணமே காதலின் வெற்றி என்ற பார்முலாவை இளைஞர் மனதில் பதித்து விட்டது தான் என்றும் சொல்லலாம். பார்த்துக் காதல், பார்க்காமல் காதல், மோதல் காதல், மோகக்காதல், இரக்கக்காதல் என்று ஏகப்பட்ட காதல்கள் வெள்ளித்திரையில் காட்டப்பட்டாலும் திருமணத்தோடு அங்கு காட்சி முடிந்து விடுகிறது. அதன் பிறகு எல்லையில்லாத ஓர் இன்பப் பயணம் தான் என்ற கற்பனை காண்பவர் மனதில் விரிகிறது. ஆனால், உண்மையில் திருமணம் காதலின் வெற்றியல்ல. அது காதலின் வெறும் நுழைவுத் தேர்வே. உண்மையான வெற்றி அந்த ஆரம்ப இனிமையைக் கடைசி வரையில் தக்க வைத்துக் கொள்வது தான். 


திருமணத்தில் முடியாத காதல் சோகமானாலும் அது பல இனிய நினைவுகளை சாசுவதமாக மனதில் தக்க வைத்துக் கொள்கிறது. ஆனால் திருமணத்தில் முடிந்த காதல் பல சமயங்களில் கலைந்த கற்பனைக் கனவுகளாகவும், கானலைத் தேடி ஓடிய ஓட்டமாகியும் விடுகிறது. 

இதெல்லாம் எதனால்? எங்கே தவறு நிகழ்கிறது என்று சிந்தித்தால் 'புரிந்து கொள்ளுதல்' என்கிற அம்சம் இது போன்ற காதலில் இல்லாமல் போகிறதால் தான். கண்மூடித்தனமான காதல் என்றும் கசப்பான அனுபவமாகவே முடியும். எனவே காதலிப்பவர்களே கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு காதலியுங்கள். 

முதலில் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நிறைய கேளுங்கள். நிறைய கவனியுங்கள். அவசர முடிவுகளைக் கண்டிப்பாக எடுக்காதீர்கள். காதலிக்கும் நேரத்தில் காதலிப்பவரிடம் ஒரு குறையும் தெரியாது விட்டால் நாம் கண்களை மூடிக் கொண்டு காதலிக்கிறோம் என்று அர்த்தம். காதலிப்பது மனிதப்பிறவியை என்றால் குறைகள் கண்டிப்பாக இருக்க வேண்டுமல்லவா? அந்தக் குறைகளில் முக்கியமான சிலவற்றையாவது அறிந்திருங்கள். அவர்களுடைய முக்கிய பலவீனங்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவை உங்களால் சகித்துக் கொள்ள முடிந்தவையா, பொறுத்துக் கொள்ள முடிந்தவையா என்று யோசித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் தேனிலவு முடிந்த பின்னர் நீங்கள் தினமும் சந்திக்கக்கூடியவை அவை. 


 உண்மையான காதல் இருக்கும் போது மாறுவதும் சுலபம், மாற்றுவதும் சுலபம். ஆனால் காதலின் பலத்தை விடக் குறைகளின் தாக்கம் பெரிதாக இருக்கையில் மாறுதல் சுலபமல்ல. பெரிய பாதிப்பில்லாத குறைகளையும் பலவீனங்களையும் பொறுத்துக் கொள்ளலாம். அலட்சியப்படுத்தலாம். ஆனால், அவை சகித்துக் கொள்ள முடியாதவையாக இருக்கும் போது, அதை உணர்த்தி மற்றவரை மாற்றவும் முடியாத போது காதல் முன்பு கொடுத்த மகிழ்ச்சிக்கு மும்மடங்கு துக்கத்தைத் தருவதாக அமைந்து விடும் என்பதற்கு எத்தனையோ பேர் வாழ்க்கையே சாட்சி.

வாழ்க்கை மூன்று மணி நேர சினிமா அல்ல. வாழ்க்கையின் எல்லை வரை நீளும் உண்மைக் காதலை சினிமா மூலமோ, கற்பனை மூலமோ தெரிந்து கொள்ள முடியாது. சர்க்கரையைப் படத்தில் பார்த்தோ, எழுதியதைப் படித்தோ அதை சுவையை உணர முடியாது. சாப்பிட்டால் மட்டுமே அதன் இனிப்பை உணர முடியும். காதலும் அப்படித்தான். பார்த்த சினிமாவை வைத்தோ, படித்த கதையை வைத்தோ கண்மூடித்தனமாய் ஏற்படும் கவர்ச்சியைக் காதல் என்று எண்ணி ஏமாந்து விடாதீர்கள். அந்த உண்மைக் காதலின் உன்னதத்தை உணர வேண்டுமென்றால் கண்களைத் திறந்து வைத்துக் காதலியுங்கள். அது முடிந்தால் உண்மையான காதல் உங்களுக்குக் கைகூடக்கூடும். அதன் மூலம் கிடைக்கும் பேரானந்தத்தை கடைசி மூச்சு வரை நீங்கள் அனுபவிக்கக்கூடும்.

இந்த படத்த பாருங்க... புரியும்...!!!

 

ஓட்டு போடுங்க. நாலு பேருக்கு நல்லது செய்யுங்க..!

காதல் கவிதை - தனிமையில் உன்னினைவோடு


உயிர் மெய் எழுத்துகளை உருக்கி
மெய் நீ எந்தன் உயிர் என்று
செதுக்கி, கோர்த்து, கட்டுகிறேன்
பண்மாலை இங்கு!

சித்தத்தில் கலந்தாய்!
நித்தம் நித்தம் எந்தன்
நினைவுக்குள் நுழைந்தாய்!
வித்தகனாய்  என்னை
விதவித கவிபடைக்க ஆணையிட்டாய்...

கற்றவர்கள் எழுதிவைத்த புத்தகத்தில் காணாதின்பம்
சுட்டுவிழி சுடரோளியே
உந்தன் சொல்லழகில் கண்டேன் பெண்ணே!

ரம்பையாம் ஊர்வசியாம்
இவ்மூலோகத்து பேரழகியாம்
உன்னை கண்டபின்னே இவ்வழகிகள்
இங்கு தேவையில்லை பெண்ணே!!

அழகு என்றால் நீயே என்று கூறமாட்டேன்
எனக்கு அழகு நீதான் என்று
எச்சபையிலும் அடித்து கூறமறக்க மாட்டேன்!!!

என் அழகே நீ இங்கு
என் நினைப்பு வந்ததென்று
மணியடித்து கூற இங்கு என்
மனதுக்குள் பேரின்பம்
நினைவுக்குள் உன் உருவம்
கண்ணுக்குள் பல கவி வடிவம்
இக்கருணை வேண்டும் எனக்கு இங்கு என்றென்றும்!!!!!!

சொல்லடுக்கி சொல்லப்போனால்
சொல்லிக்கொண்டே இருப்பேன் இங்கு நான்
எந்தன் காதலை உன்னிடம்
நாளைக்கும் சொல்ல வேண்டும்
ஆகையால் இன்று இங்கு
முற்று வைப்போம் என் செல்லமே!!!!!!!!!