கவிதை எழுத நினைத்தேன்
நினைவுக்கு வந்தாய் நீ
என் பேனா எழுத மறுத்தது
கவிதைக்கே கவியா? - என்று
பேச நினைத்தேன்
என் உதடுகள் உச்சரித்தது
உன் பெயர் மட்டுமே
என் மனம் சொன்னது
நல்ல கவிதை - என்று
இசையை இரசிக்கலாம்
என்று நினைத்தால்
என் இதயம் என்னது
நீ பேசும் மொழியே
நான் கேட்க விரும்பும்
ஏழிசை கீதம் - என்று
கண்ணாடி பார்த்தேன்
அதிலும் விம்பங்களாக
உன் உருவம் மட்டுமே
என் கண்களுக்கு புலபடுகிறது
உண்ண அமர்ந்தேன்
நீ பரிமாறாத உணவு
உண்ண பிடிக்கவில்லை எனக்கு
அந்த உணவு கூட கசக்குது எனக்கு
தூங்க வந்தேன்
நீ இல்லாமல்
பஞ்சு மெத்தை கூட
கருங் கற்கள் ஆனதடி எனக்கு
எனக்குளே ஆயிரம் கவிதைகள்
நீ மட்டும் எழுதபடாத கவிதையாக
நிஜமான நிஜங்களாக
நினைவெல்லாம் நீயாக!
No comments:
Post a Comment