Wednesday, October 13, 2010

இந்த வாரம் ’சச்சின்’ வாரம்

இந்த வாரம் கண்டிப்பாக சச்சின் வாரம்! ICC விருது, முதல் டெஸ்டில் 98, 38. ரன்கள்.  டெஸ்ட் போட்டிகளில் 14,000 ரன்களைக் கடந்த முதல் வீரர். இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 214 ரன்களை எடுத்திருக்கிறார்.. இன்று கூட ஆட்டமிழக்காமல் 53* ரன்களை குவித்து வெற்றிக்கு வழிவகுத்துள்ளார் நம் தொடர்(ஆட்ட) நாயகன்...


சச்சினின் 49 ஆவது சதம்! இரண்டு சிக்ஸர் அடித்து சதத்தை நிறைவு செய்தார் சச்சின். சிக்ஸரால் சச்சின் சதமடிப்பது 5 ஆவது முறை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11 ஆவது சதம் மற்றும் ஆறாவது முறை 150 ரன்களுக்கு மேல்! 20 ஆவது முறையாக 150 ரன்களுக்கு அதிகமாகப் பெற்று லாராவின் சாதனையை (19 முறை) முறியடித்திருக்கிறார்.



சச்சின் வாங்காத விருது அனேகமாக ICC Cricketer of the Year விருது மட்டுமே. அந்தக் குறையும் ரசிகர்களுக்குத் தீர்ந்தது. Cricketer of the Year மற்றும் People's Choice Award என இரண்டு விருதுகள்! ICC க்கு நன்றிகள். இன்னும் பல விருதுகள் காத்திருக்கின்றன!


20 வருடங்களுக்கும் மேலாக கிரிக்கெட்டின் மீதுள்ள நேசமும், அர்ப்பணிப்பும் சச்சினுக்கு மேலும், மேலும் புகழ் சேர்க்கிறது. இன்னும் பல சாதனைகளை சச்சின் நிகழ்த்துவார். வாழ்த்துக்கள் சச்சின்! 

தனது சாதனைகளுக்காக விளையாடுபவர் என்ற அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு சச்சின் தனது ஈடற்ற திறமையால் எப்போதோ பதில் சொல்லிவிட்டார்.

.Thanks: Sri (Inaiya Nanbarkalukkaga Blog)

1 comment:

வரதராஜலு .பூ said...

//தனது சாதனைகளுக்காக விளையாடுபவர் என்ற அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு சச்சின் தனது ஈடற்ற திறமையால் எப்போதோ பதில் சொல்லிவிட்டார்.//

ம்ம்ம்ம்.

Ad