Thursday, September 22, 2011

முதன்முதலாய் காதலிக்கு..



ப்ரியமானவனே ..,

 உனக்காக ஒரு கடிதம் ..,

ஆனாலும், நமக்கிடையே கடிதங்கள் தேவை இல்லை,,,
என் விழிகள் சொல்லாததை ..,
விரல்கள் சொல்லிவிட போவதில்லை..,

வார்த்தைகளாய் சொல்வதை விட..,
வாழ்ந்து காட்டுவது சிறந்தது அல்லவா??..,

ஒரு அர்த்தத்தை சொல்லுமென வார்த்தைகளை எதிர்பார்க்காதே...,
ஓராயிரம் அர்த்தங்களை சொல்லும் என் மௌனங்களை வாசித்து பார்..,
உனக்கு புரியும்..,

என் காதல்..,நான் வார்த்தையாய் சொல்லித்தான் உன்னை வந்தடைய வேண்டும் என்றால்..,
அது என்னிடமே இருக்கட்டும்..,

வார்த்தை இல்லாமல்..,
வாய்ப்பும் இல்லாமல்..,
உன் வட்ட விழிக்குள் பார்க்கவும் இயலாமல்..,
சொல்லாத காதலொன்று சிக்கி கிடக்குது என் நெஞ்சு குழிக்குள்..,

நான் சிரித்த போது நீ சிரித்தாய் ..,
நான் அழுத போது நீ அழுதாய்..,
நான் காயப்பட்டேன் நீ கண்ணீர் சிந்தினாய்..,
நான் காதலிக்கும் போதுமட்டும் ஏன் கண்மூடி கொள்கிறாய்..,
உன் மௌனம் சம்மதமா?,, இல்லை மறுதலிப்பா??

கடல் சேரமுடியாத நதிகள் மீண்டும் மலை திரும்புவதில்லை..,
காய்ந்து போவதை தவிர அவற்றிற்கு வேறு வழியும் இல்லை..,

பாதை இது தான்..,பயணமும் இது தான்..,
பதில் மட்டும் நீ சொல்..,
நான் - உன் வழிதுணையா? இல்லை வாழ்க்கை துணையா?

உலகம் என்னை உதறிய போதெல்லாம்..,புன்னகைத்து நின்றேன்..,
பற்றி கொள்ள உன் கரம் இருக்கின்ற தைரியத்தில்..,
நீ என்னை வேண்டாம் என்றால்..என்னாலும் உதற முடியும்..,உன்னை அல்ல இந்த உலகத்தை!!

உலகமெல்லாம் ஓடி காதல் நீ தேட..,
பத்திரமாய் உன் காதல் ஒளிந்திருக்கிறது எனக்குள்..,
நீ தான் நான் என நான் கண்டு கொண்டேன்..,
நான் தான் நீ என நீ கண்டு கொள்வது எப்போது..,

காதல் சுமை தான் சுகமாக சுமக்கிறேன்..,
காதல் வலி தான் மௌனமாய் தாங்கி கொள்கிறேன்..,
காதல் ஏமாற்றம் தான் திட்டமிட்டே ஏமாந்து போகிறேன்..,
காதலிக்கபடுவது நீயாய் இருக்கும் பட்சத்தில்..,
காதலை எப்படி வேண்டாம் என்று சொல்வேன்,,

காதலன் வருவான் என காத்திருத்தல் சுகம்..,
காதலே வரும் என காத்திருத்தல் ரணம்..,

நீ தரும் ஒற்றை ரோஜாவுக்காக ஒரு ஆயுள் முழுவதும் காத்திருப்பேன் நான்..,

மழை பெய்யும் ஒரு இரவில் சட்டென நீ விழிப்பாய்..,
உடனே என்னை நினைப்பாய்..,
அப்போது தெரியும் என் காதல் உனக்கு புரியும்..,

அது வரை உனக்காக மட்டுமே என் பிரார்த்தனைகள் கண்ணீர் சிந்தும்..,

000

1 comment:

Shanmugam Rajamanickam said...

சூப்பர் பாஸ்

Ad